ம்ம் இன்னும் ஒரு நாள் தான்... நாளை இரவு என்னோட குடிசையில எந்த நாயையும் உள்ள வரவிடமாட்டேன்"..... என்று சத்யனுக்கு கேட்பது போல் சற்று உரக்கவே கூறினாள் மான்சி
மன வேதனையில் படுத்திருந்தவனின் காதில் மான்சியின் வார்த்தைகள் கேட்டது..... ஆனால் சத்யனுக்கு கோபமே வரவில்லை.... சிரிப்புதான் வந்தது... ஆமாம் நான் நாய்தான்டி... உன்னை காவல் காக்கும் நாய்.... உன் காலையே சுற்றுமே தவிர வேறு எங்கும் போகாது... என்று முனங்கியபடி படுத்துக் கொண்டான்...
ஆனால் அதன்பின் மான்சி உறங்கவேயில்லை .... கண்ணீர் வழியும் சத்யனின் கண்களைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை..... அவன் கண்ணீருக்கு அர்த்தம் என்ன? இப்படி ஆயிட்டேன்னு பரிதாப்படுறானா? ஏனோ அவனது பரிதாபம் கூட மான்சிக்கு ஆத்திரத்தையே ஏற்ப்படுத்தியது.... புகையும் இதயத்தோடு விடிய விடிய விழித்துக் கிடந்தாள்.... சரியாக நாலரை மணிக்கு இருட்டோடு எழுந்து சத்யன் செல்வதைப் பார்த்தாள் ......
சற்றுப் பொருத்து குளிப்பதற்காக உடைகளை எடுத்துக்கொண்டு குளத்துக்கு சென்றவள் நீரில் இறங்கியதும் தான் கவனித்தாள் ,, தூரத்தில் ஒரு உருவம் போர்வை போர்த்திக் கொண்டு கையில் ஒரு தடியுடன் அமர்ந்திருப்பதை.... பார்த்ததுமே அது சத்யன் தான் என்று கண்டுகொள்ள முடிந்தது ... ' ஓ.... தினமும் வந்து காவல் காக்குறானாக்கும்?' மீண்டும் உள்ளுக்குள் புகைந்தது ... கோபம் குறையாமலேயே குளித்துவிட்டு வெளியே வந்தவள் மரத்தின் மறைவுக்கு சென்று உடைமாற்றிக்கொண்டு வந்தாள்...
இவள் பள்ளிக்கூடத்தை நோக்கி நடக்கும் போது சட்டென்று நின்று திரும்பிப் பார்க்க ... சத்யன் எழுந்து நின்று இவள் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் ... மான்சி விடவிடுவென்று நடந்து சென்றாள்...
ஏழாவதுநாள் காலை எட்டு மணிக்கே கூரை கட்டும் ஆட்கள் நான்கு பேர் வந்துவிட வேலை வேகமாக நடந்தது ... மான்சி அவர்களுக்கு உதவியபடி அவர்களுக்கு சாப்பாடும் தயார் செய்தாள்...
மதியம் சரியாக இரண்டு மணிக்கு மான்சியின் அழகான குடில் தயாராகி விட்டது.... தன் கண்ணெதிரே கம்பீரமாய் நின்ற குடிசையை கண்டு மான்சிக்கு கண்ணீர் தான் பெருகிற்று..... முகத்தை மூடிக்கொண்டு குலுங்கியவளின் தோளில் தட்டி ஆறுதல் படுத்தினாள் பாட்டி
கூரை கட்டியவர்களுக்கு சாப்பாடு போட்டு அவர்களுக்கான கூலியை கொடுத்தனுப்பினாள்... பிறகு பாட்டியின் வீட்டிலிருந்த பாத்திரங்களை எடுத்து வந்து குடிசைக்குள் வைத்தாள் .... அன்று மாலை பால் வாங்கி வந்து குடிசைக்குள் அடுப்பு பற்ற வைத்து பாலை காய்ச்சி முதலில் தன் மகனுக்கு புகட்டி.. பிறகு பாட்டிக்கும் கொடுத்தாள்...
வீட்டுக்கு பின்புறம் இருக்கும் பாறையின் மீது அமர்ந்து மான்சியின் வீட்டையேப் பார்த்தான் சத்யன் ... அவன் நெஞ்சு கர்வத்தில் நிமிர்ந்தது.... என் தேவதை கட்டிய வீடு.... அவள் வாழப் போகும் கோயில்... ஒரு தனி மனிஷியின் உழைப்பில் அழகாக நிமிர்ந்து நின்றது அந்த கோபுரம்.... ஆனால் அந்த கோபுரத்தில் வந்து அமர இந்த மாடப்புறாவுக்கு அனுமதி கிடைக்குமா??
மான்சியின் குடில்,,,
விடா முயற்சியும்... தன்நம்பிக்கையும்
குழைத்துக் கட்டிய கோபுரம்
பண இருப்பை காட்டிக் கொள்ளாத ..
பச்சை மண்ணால் செய்த குடில்...
கோபம் , போட்டி , பொறாமை,
மகிழ்ச்சி , கண்ணீர், வெற்றி , தோல்வி ,
என எல்லாம் கலந்த மண் ஓவியம்...
ஒரு பெண்ணின் அயராத உழைப்பின் அடையாளம்.....
ஒரு ஆணின் அன்பான கண்ணீருக்கு கிடைத்த பரிசு......
பெருமையில் என் இதயம் விம்மினாலும்...
இந்த குடிசையில் இனி நீ வாழும் போது .....
எனக்கான இடம் எங்கே??
மகளுக்கு குழந்தை பிறந்து விட்டதால் சுகுனாவால் வரமுடியாமல் அடிக்கடி கடிதம் மூலமாகவும்.. ஏழுமலையின் போன் மூலமாகவும் மான்சியைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டாள்.....
சத்யன் தொலைவிலிருந்தபடி தன்னை தொடர்வதையும் கண்டுகொண்டு தான் இருந்தாள்.... அருகில் நெருங்கும் போது அவனுக்கு இருக்கு கச்சேரி.... இப்போ தள்ளி நிற்பனை தேடிப் போய் வாதிடுவது சரியில்லை என்று முடிந்தவரை ஓதுங்கிப் போனாள்......
குடும்பம் பெருகி சோத்துக்கு வழியில்லை என்றதும் மஞ்சளாவும் வேலைக்கு வர ஆரம்பித்தாள் .... மான்சியை நேரடியாக பார்க்கும் நேரங்களில் அவளின் ஜாடை பேச்சை காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு வக்கிரமாக இருந்தது.... மான்சியும் விடுவதாக இல்லை... அவ்வப் போது சரியான பதிலடிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள்
அன்றும் அப்படித்தான் கரும்பு கத்தை தூக்கி டிராக்டரில் ஏற்றும் வேலைக்கு எல்லாப் பெண்களும் வந்திருந்தனர்..... சத்யன் கரும்பு வெட்டும் வேலைக்கு வந்திருந்தான்.... கழனியில் வெட்டிப் போடும் கரும்புகளை கத்தையாக கட்டி அவற்றை ரோட்டில் நிற்க்கும் டிராக்டரில் கொண்டு போய் அடுக்க வேண்டும் ...
மான்சி எல்லாப் பெண்களுடன் கரும்பு கத்தைகளை சுமந்து செல்ல... அப்போது மர நிழலில் தூங்கிய குழந்தை அழ ஆரம்பித்தது... மான்சி குழந்தையை தூக்க செல்ல... திரும்பிப் பார்த்த மஞ்சுளா " பொறந்ததும் அப்பனை முழுங்குச்சு... இன்னும் யாரை முழுங்க இந்த கத்து கத்துனு தெரியலை... சரியான தரித்திரம் பிடிச்சது" என்று குழந்தையை திட்ட....
அது சரியாக சத்யனின் காதில் விழுந்தது.... குழந்தையை திட்டிவிட்டாள் என்றதும் பயங்கரமாய் கோபம் வர.. ஆத்திரமாய் மஞ்சுளாவை நெருங்கி " நீயெல்லாம் ஒரு பொம்பளையா? பச்சப் புள்ளையப் போய் இப்புடி பேசுறியே?" என்று கேட்டுவிட்டான்...
இது போதாதா மஞ்சுளா பேயாட்டம் போடுவதற்கு? " வாடா பூமாத்தா மவனே..... என்ன பழைய ஒறவு பூக்குதா? ... முன்னாடி காட்டுக்குள்ள மாடு மேய்க்கப் போறேன்னு ரெண்டு பேரும் கூத்தடிப் பீங்க.... இப்ப காட்டுலயே மலை ஓரமா வீடு கட்டிட்டா... இனி நீ அவ வீட்டுல போய் படுத்து எழுந்து வந்தா கூட யாரும் கேட்பாரில்லை" என்று சத்யன் மான்சியின் பழைய காதலை அத்தனைபேர் முன்பும் அசிங்கமான உறவாக சித்தரித்து அவள் பேச...
சத்யன் ஆடிப் போனான்... ஏற்கனவே தன்னை கண்டாலே நெருப்பாய் தகிக்கும் மான்சியின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழுந்தால்?? சத்யன் பயத்துடன் சட்டென்று திரும்பிப் பார்க்க.. கையில் குழந்தையுடன் மான்சி நின்றிருந்தாள்...
கண்ணீரை அடக்க கீழுதட்டை அழுத்தமாக கடித்துக்கொண்டு முகமெல்லாம் ரத்தம் உறைய நின்றிருந்தாள்.... அவள் பார்வை மஞ்சுளாவை விட அவள் அப்படி பேச காரணமாயிருந்த சத்யன் மீதே இருந்தது ....
அவச் சொல்லால் ஏற்பட்ட ஆத்திரம் கண்ணை மறைக்க .... சத்யனை நோக்கி ஆத்திரமாக விழித்து " உன்னை யாரும் பஞ்சாயத்து பேச தாம்பூலம் வச்சு அழைச்சாங்களா? ஒனக்கு யாரு இந்த எச்சி எலைக்கு ஏஜண்டு.. குப்பத்தொட்டிக்கு குமாஸ்தா வேலை செய்ய சொன்னது ? அந்த பொம்பளைக்கு பதில் சொல்ல எனக்கு வாயிருக்கு.... நானு பதிலடி குடுப்பேன்... உன்னை யாரும் இங்க பந்தி விசாரிக்க கூப்பிடலை... வந்துட்டான் திரவுபதிக்கு சீலை குடத்த கண்ணபரமாத்மாவாட்டம்..... இன்னொரு முறை என் விஷயத்துல மூக்கை நுழைச்சேன்னு வை?... அப்புறம் என் வாய் பேசாது... என் வீட்டுப் புழக்கடை கூட்டுற விளக்குமாறு தான் பேசும்...." என்று ஆக்ரோஷமாக கத்தினாள் ....
சத்யனை நிமிர்ந்து முகம் பார்த்துக் கூட பேச தயங்கி நிலம் பார்த்து பேசும் மான்சியின் வார்த்தைகள் சத்யனின் இதயத்தை உடைத்துவிட்டது என்பது சிறிய உதாரண வார்த்தை தான் .... தனது கடுஞ்சொற்களால் மொத்தமாக சத்யனையே நொருக்கி தூசாகப் பறக்க விட்டிருந்தாள் மான்சி
அங்கே நிற்பது சத்யனே அல்ல என்பது போல் நிலை குத்திய பார்வையும் வேரோடிய கால்களுமாக நின்றிருந்தான் சத்யன்..... மான்சியின் நான்கே வார்த்தை அவனது கம்பீரத்தை சூரையாடியிருந்தது
குழந்தையைத் தூக்கிக் கொண்டு போகிறப் போக்கில் பேசிக் கொண்டே போனாள் மான்சி.... " நாய்க்கு மனியம் குடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.... அதப்போல வந்துட்டான் வக்காலத்து வாங்க.... பன்னி பரதேசம் போச்சாம் நாய் அதுக்கு குடை பிடிக்குதாம் ...." என்று மஞ்சுளாவை பன்னியாகவும் சத்யனை நாயாகவும் மான்சி சித்தரித்துப் பேச .... சத்யன் எரிந்து சாம்பலாகி காற்றோடு கலந்து கொண்டிருந்தான்
மான்சியின் வார்த்தைகள் மஞ்சுளாவின் வாயைக் கூட அடைத்து விட்டது,, குழந்தையை மறுபடியும் தூங்க வைத்துவிட்டு மான்சி சுமை தூக்கப் போய் விட.... சத்யன் தலையில் கட்டியிருந்த துண்டை உருவி தோளில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு திரும்பி நடந்தான்.... அத்தனை பேரும் நடந்ததை வேடிக்கைப் பார்த்திருந்தனர்
வீட்டுக்கு வந்து உள்ளே கூட நுழையாமல் திண்ணையிலேயே விழுந்தான் சத்யன் ... மான்சியால் என்னை இவ்வளவு கேவலமா கூட பேச முடியுமா? பேசிட்டாளே? ஊரேக் கூடி நிக்க அத்தனை பேர் முன்னாடியும் பேசிட்டாளே? சத்யனின் ஆறடி உடலும் குறுகிப் போனது....
பூமாத்தாவும் வேறு ஏதோ வேலைக்குப் போயிருக்க ... அன்று மாலை வரை சத்யன் உணவின்றி அப்படியே கிடந்தான்....
மாலை வீடு திரும்பிய பூமாத்தாள் மகன் சுருண்டு போய் படுத்துக் கிடப்பதைப் பார்த்து பதறவில்லை... மாறாக தன் தோளில் முகவாயை இடித்துக்கொண்டு வீட்டுக்குள் போனாள்...
பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு திடுக்கென்று எழுந்து அமர்ந்தவன் வேகமாக வீட்டுக்குள்ளே போக....
அவனுக்காவே காத்திருந்தது போல் பத்திரகாளியாய் நின்றாள் பூமாத்தா.... " ஏன்டா பாவி என் குடும்ப மானத்தை ஊர் ஊரா சிரிக்கடிக்கிற? அந்த முண்டச்சிக்கு வக்காலத்து வாங்கப் போயி நாலு பேரு மத்தியில அவ உன்னை வெளக்குமாத்தால அடிப்பேன்னு சொன்னாலாமே? ஊரே பேசி சிரிக்குதுடா ..... அடப்பாவி உனக்கு மானம் ஈனமே இல்லையா? என் வயித்துல வந்து பொறந்தியேடா பாவி மவனே" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கத்தி ஆர்பாட்டம் செய்தாள்....
சத்யனின் இதயத்துக்கு மேலும் ஒரு அடி விழுந்தது ... ரொம்பவே பலகீனமானவன் போல் எதுவும் பேசாமல் வெளியே வந்து படுத்துக்கொண்டான்....
அவன் மனம் மட்டும் மான்சியை சுற்றி சுற்றி வந்தது... உனக்கு நான் யாரோவா ஆய்ட்டேனா மான்சி? கதறியது உள்ளம் ... கண்ணீரை யாரும் காணாத வாறு துண்டால் மூடிக்கொண்டான் ....
இதுவரை தன்னை இகழ்ந்து பேசாத தாயும் இடித்துரைத்ததில் சத்யன் நொந்து போனான் .... வீட்டுக்குள் பூமாத்தா இன்னும் கோபமாக கத்திக்கொண்டிருந்தாள்....
அன்புத்தாயே அன்புத்தாயே
என்னம்மா இந்த கோபம்?
எந்தன் உள்ளம் தாங்காதம்மா
இந்த துன்பம் ஏன்னம்மா
மேகங்கள் மூடிக்கொண்டால் வெண்ணிலவு விண்விட்டு போவதில்லை
சோகங்கள் மூடிக்கொள்ள என்னை விட்டு போனது எந்தன் உள்ளம்
உன் பிள்ளை என்றால் வந்துவிடு
இல்லையென்றால் என்னை கொன்று விடு
எந்தன் உள்ளம் தாங்காதம்மா
அன்புத்தாயே அன்புத்தாயே
என்னம்மா இந்த கோபம்?
எந்தன் உள்ளம் தாங்காதம்மா
இந்த துன்பம் ஏன்னம்மா
முத்துக்கு நேரம் வந்தால்
முத்து அந்த சிப்பிக்கு சொந்தமில்லை
பெண்மைக்கு நேரம் வந்தால்
பெண்கள் என்றும் பெற்றவர் சொந்தமில்லை
அன்னை என்றால் என்னை மன்னிக்கவா
தப்பு என்றால் தண்டிக்கவா
அன்னை நீயே அன்பே நீயே
அன்புத்தாயே அன்புத்தாயே
என்னம்மா இந்த கோபம்?
எந்தன் உள்ளம் தாங்காதம்மா
இந்த துன்பம் ஏன்னம்மா
அதன் பின் சத்யன் மான்சியை விட்டு சற்று ஒதுங்கினான்... அவள் வார்த்தைகளின் பாதிப்பு என்பதை விட... தான் நெருங்கினால் அவளுக்கு ஏற்படும் அவபெயர் தான் சத்யனை ஒதுங்க வைத்தது .... விலகியிருந்து பார்த்தான் தனது இதய ரோஜாவின் அழகை .....
ஆனால் மான்சி அவனைத் திட்டியதில் சத்யனுக்குப் புதிதாக ஒரு சந்தேகம்..... குழந்தை கேட்கும் அழகான பொம்மையை வாங்க காசில்லை என்றால் ... அய்யோ அந்த பொம்மை நல்லாவே இல்லை ... வேணாம் ' என்று ஒரு தாய் கூறுவாளே? அதாவது குழந்தை பொம்மையை மறக்க வேண்டும் என்று நல்ல பொம்மையை குறை சொல்வாளே அம்மா.... அதுபோல் தான் மான்சி பேசினாளோ? இங்கே குழந்தை மான்சியின் மனம்... பொம்மை சத்யனோ? யாருக்குத் தெரியும் பெண் மனதின் ஆழத்தில் இருப்பது?
இப்போது மான்சி முறைத்துக் கொண்டு பேசியதை நினைத்து நினைத்து ரசிக்கக் கற்றுக் கொண்டான் சத்யன்... பேசும் போது மான்சியின் முகம் சிவந்து போனதை இப்போது எண்ணி எண்ணி ரசித்தான்.... பொழுது கூட சுகமாக போனது .....
இந்த ஊரில் வேலை எதுவும் இல்லாததால் அன்று பக்கத்து ஊரில் பாய் நெய்யும் பச்சை கோரை சுமை தூக்க கிராமத்து ஆட்கள் எல்லோரும் சென்றார்கள் ... மான்சியும் மகனைத் தூக்கிக்கொண்டு போனாள்....
அறுக்கப்பட்ட கோரைகள் பெரிய பெரிய கட்டுகளாக கட்டி கோரை கழனியில் அடுக்கப் பட்டிருக்க... இரண்டு ஆண்கள் கட்டுகள் மீது நின்று கொண்டு கோரை சுமையை பெண்களின் தலை மீது தூக்கி வைத்தனர்.... அதில் ஒருவன் சத்யன்....
ஒரு சுமைக்கு மூன்று ரூபாய்.... முடிந்தால் இரண்டு சுமைகளாக கூட தூக்கிச்செல்லாம்.... எடுத்துச் சென்று கழனிக்கு வெளியே நிற்க்கும் லாரியில் ஏற்ற வேண்டும்.... சில பெண்கள் இரண்டு இரண்டு கட்டுகளாக தூக்க... மான்சியும் இரண்டு கட்டுகளாக தூக்கினாள்.... கூலி அதிகமாக வரும் என்பதால் ......
கொஞ்ச நாட்களாக சத்யனை காண்பதில்லை , அவன் ஒதுங்கிப் போய்விட்டான் என்பதால் மான்சியும் அமைதியாகவே இருந்தாள்..... சத்யன் தூக்கி விட மான்சி கீழே நின்று தலையில் வாங்கிக்கொண்டாள்.... அவளுக்கு எதுவுமில்லை என்றாலும் ... அவளின் அருகாமை சத்யனுக்கு தவிப்பாக இருந்தது ....
மேலே நின்று கோரை கட்டை மான்சியின் தலைக்கு மாற்றும் போது அவன் கண்களால் கவனிக்கப்பட்ட பாகங்கள் சத்யனை ரொம்பவே தடுமாற செய்தது.... சத்யனுக்கு இது புதுசு..
கடுமையாக உழைத்தாலும் .... நிம்மதியாக சொந்த வீட்டில் சாப்பிட்டு உறங்கும் மான்சி மேலும் மெருகேறித் தெரிந்தாள்..... உள்ளாடை அணியாத வனப்பு மிகந்த வதனம் கட்டைத் தூக்கி தலையில் வைக்கையில் குலுங்கும் போது சத்யனின் இதயம் வாய் வரை வந்து துடித்தது ...
ம்ஹூம் இது சரிவராது... அந்த பக்கமாக போய்விட்டு அந்தாளை இந்த பக்கம் வரச் சொல்லலாம் என்று சத்யன் நினைத்த மறுகணமே அவனது மனது சண்டித்தனம் செய்தது .....
கட்டை தலையில் வாங்கும் போது மான்சியால் நிமிர்ந்துப் பார்க்க முடியாது என்ற காரணத்தால் சத்யன் கண்கள் ரொம்பவே சுதந்திரமாக.... நிதானமாக.... மென்மையாக வருடியது மான்சியின் அங்கங்களை..... அவன் ரசிக்க வேண்டிய சொந்த அழகுதானே இவை எல்லாம்... முரண்டிய மனதிடம் கேள்வி கேட்டான்...
மதிய உணவு கழனிக்கு சொந்தக்காரர் வீட்டிலிருந்து வந்தது... எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்து சாப்பிட... மான்சி மகனுக்கு ஊட்டியபடி தானும் சாப்பிட்டாள்.... சாப்பிட்டு முடித்து அரை மணிநேர இடைவேளையில் எல்லோரும் அரட்டையடிக்க மான்சி மட்டும் குழந்தையை ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு அடுப்புக்கு விறகு சேகரிக்கப் போய்விட்டாள்....
சேகரித்த விறகை கட்டி வைத்து விட்டு மீண்டும் கோரை சுமை தூக்க சென்றாள்..... எல்லாம் ஒழுங்காகத்தான் போனது.... சுமை முடிந்து போனதும் மாலை ஐந்தரைக்கு எல்லோரும் கூலி வாங்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு கிளம்பினார்கள்....
மான்சியும் கூலியை வாங்கிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மார்போடு சாய்த்து கட்டிக்கொண்டு வழியே போன ஒருவரை கூப்பிட்டு விறகு சுமையை தூக்கி தலையில் வைக்கசொல்லி தூக்கிக்கொண்டு நடந்தாள்....
இரண்டு ஊருக்கும் நடுவே செல்லும் ஒற்றையடிப் பாதை.... விறகு நிறைய இருந்ததால் சுமை அதிகமாக கனத்தது.... சமாளித்துக்கொண்டு நடந்தாள்.... எல்லோரும் போய்விட ஒத்தையாக நடந்தாள்
அவளுக்குப் பின்னால் இருபதடி தள்ளி மெதுவாக நடந்து வந்தான் சத்யன்... மான்சி தலைச்சுமையை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை கண்டு மனம் வெதும்பியது.... ஆனாலும் நெருப்பை நெருங்க பயந்தது....
சில இடங்களில் மான்சி நின்று நின்று செல்ல.... சத்யனின் மனம் பாடாய்பட்டது.... குழந்தையை யாரிடமாவது கொடுத்தனுப்பியிருக்கலாமே? என்று கசிந்தது அவன் இதயம்.... கண்ணெதிரே தன் தேவதையின் துயர் காண பொறுக்காமல் எரிந்து போனாலும் பரவாயில்லை என்று நெருப்பை நெருங்க முடிவு செய்தான்
வேகமாக மான்சியை நெருங்கி " மான்சி" என்று கவிதையாய் அவன் அழைக்க.... மான்சியின் கால்கள் சட்டென்று நின்றன... ஆனால் திரும்பவில்லை... என்ன? என்று கேட்கவும் இல்லை....
சத்யன் அவளைத் தாண்டி முன்னால் சென்று நின்றான் .... முதலில் வியர்வை வழியும் அவள் முகம் பார்த்துதான் பேசினான் " குழந்தையை குடேன் மான்சி நான் தூக்கிட்டு வர்றேன்?" என்று.... ஆனால் முகத்தில் வழிந்த வியர்வை எங்கே செல்கிறது என்று பார்வையை ஓடவிட்டவன் அப்படியே நிலைக்குத்திப் போய் நின்றான்....
குழந்தையின் முகம் மெத்தென்று மான்சியின் நெஞ்சில் சாய்ந்திருக்க ... வியர்வைத் துளிகள் கழுத்து சரிவில் இறங்கி எங்கோ ஓடி மறைந்தது... வியர்வைத் துளியைத் தேடிச் சென்ற சத்யனும் அந்த பிளவினுள் சென்று மறைந்து புதைந்து போனான்......
" ஏய்............. " என்ற மான்சியின் ஆவேசமான கத்தலில் திகைத்து நிமிர்ந்தவன் அப்போதுதான் தன் தவறை உணர்ந்து விதிர்த்துப் போய் " இல்ல மான்சி.... வந்து......... குழந்தையை வாங்கத்தான் வந்தேன் ......." என்று மான்சி எனும் சுழலில் சிக்கிய ஓடமாய் தடுமாறித் தத்தளிக்க
" ச்சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா? ..... உன்னைப் போய் நல்லவன்னு நெனைச்சு முன்னாடி பழகினேன் பாரு என் புத்திய செருப்பால அடிக்கனும்.... எவ்வளவு ஈன புத்திடா உனக்கு? " என்றவள் அவனைச் சுற்றிக்கொண்டு வேகமாய் நடந்தாள்....
சத்யன் தன்னையே நொந்து கொண்டு தலையில் அடித்தபடி அவளை சமாதானம் செய்யும் நோக்கில் பின்னாள் ஓடி முன்னால் சென்று நின்று .... " தப்பா நினைக்காத மான்சி... நான் அந்த மாதிரி ஆள் இல்லைனு உனக்கேத் தெரியும்... குழந்தையை குடு நான் தூக்கிட்டு வர்றேன் " என்று அவள் மார்போடு கட்டியிருந்த குழந்தையை தூக்க நினைத்து இழுக்க ... மான்சியின் மார்புச் சேலையும் சேர்ந்தே வந்தது ... யம்மா....... யம்மாடியோவ் எவ்வளவு அழகு ? மறுபடியும் கள்க் குடித்த குரங்காய் மனம் அங்கேயே குத்தித்து கும்மியடிக்க....
எச்சில் விழுங்கியபடி நிமிர்ந்தவனின் கன்னத்தில் மான்சியின் வலது கை ஆவேசமாக இறங்கியது... உழைத்து உழைத்து உரமேறிய கை... பச்சை மரப்பட்டையால் அடித்தால் உடலில் அத்தனை நரம்புகளும் பின்னிக்கொண்டு வலிக்குமே? அதுபோல் பொரி கலங்கிப் போய் நின்றான் சத்யன்.....
ஒரு கையால் குழந்தையை மார்போடு அணைத்தாள்... மறுகையால் தலைச் சுமையை வீசியெறிந்தாள் .... " அடத்தூ......" என்று சத்யனின் முகத்தில் துப்புவதற்க்குப் பதிலாக தரையில் துப்பிவிட்டு நடக்க ஆரம்பிக்க...
அவள் அறைந்த போது வராத கோபம் காறித் துப்பிய போது வந்தது ....... எதிரியை எரிக்கும் நெற்றிக்கண் போல் சத்யனின் கண்கள் சிவந்து போனது .... என் அழகை நான் ரசிக்கக் கூடாதா? கோபம் குமுறலாய் மாற ஓடிச்சென்று மான்சியைத் தொட்டுத் திருப்பினான்....
அவள் நெருப்பாய் தகிக்க... இவன் தீயாய் விழித்தான் ... " யாரைப் பார்த்துடி துப்பிட்டுப் போற?...... உன் சுயமரியாதையை மதிச்சு ஒதுங்கி நின்னேன் பாரு ? என்னைப் பார்த்தா உனக்கு துப்பதான்டி தோனும் ..... மனுஷன்னா அழகைப் பார்த்து மனம் தடுமாறத் தான் செய்வான்.... தடுமாறாம இருக்க நான் என்ன *********......... அதுக்கு நீ துப்புவியா?" என்றவன் மான்சி அடுத்து யோசிக்கும் முன் குழந்தையோடு அவளை இழுத்து தன் வலக்கையில் சரித்து இடக்கையால் முகத்தை நிமிர்த்தி அவளின் குவிந்த செவ்விதழ்களை நெருங்கினான்.....
ஆனால் தன்னைச் சுற்றி நெருப்பு வட்டம் போட்டுக்கொண்டு வாழும் மான்சி உடனே சுதாரித்துக் கொண்டாள்.... வேடன் வீசும் வலையில் வீழ்ந்திட மான்சி என்ன மானா? வேங்கையாயிற்றே ....
ஆவேசமாக அணைத்தவனை சிறுத்தையாய் மாறி அரை நெடியில் உதறிவிட்டு சிலிர்த்து நிமிர்ந்தவள் ..... " விலகிப் போடா சாத்தானே...... என் அனுமதி இல்லாம என் விரல் நகத்தைக் கூட உன்னால தொட முடியாது" என்று கர்ஜித்தவள் மகனை அணைத்தவாறு மின்னலாய் ஓட.... சத்யன் நிமிடத்தில் நிகழ்ந்த புறக்கணிப்பை எண்ணி அப்படியே நின்றான் .....
மனம் நிதானத்துக்கு வர வர தனது இமாலயத் தவறு புரிந்தது.... தனது கேவலமான நடத்தையால் மான்சியை விட்டு ரொம்பவும் தூரமாக தூக்கியெறியப்பட்டது புரிந்தது.... தலையிலடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தான்... தன் தாயின் ஒழுக்கமான வளர்ப்பு இப்படி தரம் தாழ்ந்து போனதே? குமைந்தது சத்யனின் உள்ளம்....
இருட்டியதும் தான் இருந்த இடத்திலிருந்து எழுந்தான்.... மான்சி சுமந்து வந்த விறகு கட்டு தூரத்தில் கிடந்தது.... மான்சி உணவு இடைவேளையின் போது ஓடி ஓடி சேகரித்தது.... தூக்கி தன் தலையில் வைத்துக்கொண்டான்..... மலையின் ஓரமாக செல்லும் பாதையில் நடந்து மான்சியின் வீட்டை அடைந்தான்...
கதவு பாதி மூடியிருந்தது... உள்ளே விளக்கின் வெளிச்சம் ஜோதியாய் தெரிந்தது.... மூங்கில் படலைத் திறந்து கொண்டு உள்ளே போகாமல் விறகுக் கட்டைத் தூக்கி முள்வேலியைத் தாண்டிப் போட்டுவிட்டு வந்த வழியே திரும்பினான்...
வீட்டுக்கு வந்து முகம் கழுவி விட்டு வந்தவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த கூலிப் பணத்தை எடுத்து அம்மாவிடம் கொடுத்து விட்டு சாப்பிட அமர்ந்தான்...
தட்டை கழுவி அவனெதிரே வைத்த பூமாத்தா " கோரை தூக்கப் போனவங்கல்லாம் எப்பயோ வீடு வந்து சேர்ந்தாங்க..... ஒனக்கு மட்டும் ஏன்டா இவ்வளவு நேரம் ஆச்சு?" என்று கேட்டபடி தட்டில் சாப்பாட்டைப் போட்டு வைத்தாள்....
கழனிக்குப் போய் பார்த்துட்டு வந்தேன்மா" என்று ஒரு காதல் பொய்யை சொல்லிவிட்டு சாதத்தை பிசைந்து வாயில் வைத்தான்......
வெளியே ஏதோ கூச்சலும் குழப்பமுமாக கேட்க.... வாயருகே கொண்டு சென்ற கவளத்தை மீண்டும் தட்டிலேயே போட்டுவிட்டு பதறி எழுந்தான் சத்யன்....
தாயும் மகனும் வெளியே வந்து பார்க்க..... அந்த இரவில் மலை ஜெக ஜோதியாய் எரிந்துகொண்டிருந்தது.... வட்டமாய் எரிந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாய் மேலே சென்று கொண்டிருந்தது ..... காய்ந்து போன மஞ்சிப் புல்கள் சடசடவென எரியும் சப்தம் எட்டு திக்கும் கேட்டது....
கோடைகாலத்தில் காய்ந்து போன மஞ்சிகளை இதுபோல் கொழுத்தி விடுவது ஒவ்வொரு வருடமும் நடப்பதுதான்... புதராக இருந்தால் பாம்புகள் நிறைய இருக்கும் என்ற பயத்தில் யாராவது அடிவாரத்தில் கொளுத்திவிடுவார்கள் தான்.... காலையில் பார்க்கும் போது மலை முற்றிலும் எரிந்து புற்களின் சாம்பல் பனியில் நனைந்துபோயிருக்கும்
ஆனால் பகலில் தான் கொளுத்துவார்கள்.... இந்த இரவில் கொளுத்தினால் குடியிருப்புப் பகுதிகளுக்கு நெருப்பு பரவினால் ஆபத்தல்லவா?
" எந்த நாசமாப் போனவன் வேலைனு தெரியலையே? ராவுலயா மலைய கொளுத்திப் போடுவானுக?" பூமாத்தா எரிச்சலாய் பேசியபடி வீட்டுக்குள் சென்றாள்...
சத்யன் மேல் நோக்கி எரிந்துகொண்டு போகும் நெருப்பையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.... காற்றின் போக்கில் அலையடிப்பது போல் நெருப்பு அங்கும் இங்கும் அலைபாய்ந்தது ... இந்த நேரத்துல இது யார் வேலையா இருக்கும்? மலையில் எரிந்த நெருப்பின் பொரி சத்யனின் நெஞ்சத்தில் விழுந்தது ....
மான்சி? அவளா? அய்யோ என் மான்சி?..... தலைதெறிக்க காட்டுப் பக்கமாக ஓடினான் ... மான்சியின் வீடு இப்பவும் பாதி திறந்தே இருந்தது... உள்ளே விளக்கும் எரிந்தது.... குழந்தையின் அழுகுரல் மட்டும் கேட்க... பதறும் இதயத்தை கையால் அழுத்தியபடி படலைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளேப் பார்த்தான்...
தூளியில் குழந்தை அழுதுகொண்டு கிடந்தது... மான்சியை காணவில்லை.... மான்சி..... அய்யோ மான்சி ..உன் ரோஷம் தெரிஞ்சும் விளையாடிட்டேனே.... .. சத்யனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது...
வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டு குழந்தையை தொட்டிலிலிருந்து தூக்கினான்... அழும் குழந்தையை இவனும் அழுதபடி முத்தமிட்டு " உன் அம்மாவை உன்கிட்ட கொண்டு வந்து சேர்க்கிறேன்டா செல்லம்" என்றபடி வெளியே வந்தான்....
காமாட்சிப் பாட்டியின் வீட்டுக்கு குழந்தையுடன் ஓடிவந்தான் " ஆயா மான்சி எங்கயோ வெளிய போயிருக்குப் போலருக்கு... நான் அந்த பக்கமா வந்தேன் .. குழந்தை அழுதுகிட்டு இருந்துச்சு... அதான் தூக்கிட்டு வந்தேன்...... மான்சி வர்ற வரைக்கும் குழந்தையைப் பாத்துக்க ஆயா" என்றவன் பாட்டி பதில் சொல்லு முன் அங்கிருந்து வெளியேறினான்....
கலவரத்துடன் எரியும் மலையின் அடிவாரத்தின் அருகே ஓடிவந்தவனின் கண்களில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஏழுமலை பட்டான் ...
' மான்சிக்கு எதுவும் ஆகக்கூடாது ஆண்டவா' என்று மனதுக்குள் பிரார்த்தனை செய்தபடி ஏழுமலையை நெருங்கி அவன் தோளில் கை வைத்து சற்று தூரமாய் தள்ளிக் கொண்டு வந்தான்...
" என்னா மாமா எந்த லூசுப்பயனு தெரியலை..
மலையை இந்த ராவுல கொளுத்தி விட்டிருக்கான்" என்ற ஏழுமலையின் தோளைத் தட்டிய சத்யன் கண்ணீர் பொலபொலவென வழிய " மான்சிதான்டா மாப்ள.... அவதான் கொளுத்திவிட்டு மலை மேல நிக்கிறா போலருக்கு" என்று கூற....
அதிர்ந்து போன ஏழுமலை " அய்யய்யோ என்ன மாமா சொல்ற? உனக்கு எப்புடி மாமா தெரியும்?" என கலவரத்துடன் கேட்க....
" எப்புடியோத் தெரியும் ... இப்ப அது முக்கியமில்ல... மான்சிய காப்பாத்தனும்... மலையை சுத்தி எரியுதுடா... எப்புடியாவது உள்ள போயிடலாம்... ஆனா திரும்பி வர்றதுக்குள்ள நெருப்பு மேல வரைக்கும் வந்துடும்டா" என்று கலக்கத்துடன் சத்யன் சொல்ல....
ஏழுமலையும் பயத்துடன் மலையைப் பார்த்தான்.... சட்டென்று ஏழுமலையின் முகம் பளிச்சிட.... " இல்ல மாமா வழியிருக்கு... அங்கப்பாரு மலைக்கு அந்தப் பக்கம் மஞ்சி காயலை.. பச்சையாயிருக்கு... அதனால நெருப்பு பிடிக்காம புகைது மாமா" பாருங்க புகை வெள்ளையா வருது" என்று ஏழுமலை சொல்ல...
சத்யன் மலையின் மறுபுறம் விண்னை நோக்கி சென்ற புகையைப் பார்த்தான் ... ஆம் வெண் புகையாய் தான் கிளம்பியது..... ஆனா மலையை சுத்தி அந்த பக்கம் போறதுக்குள்ள????
" ஆமா மாப்ள.... எப்புடிடா அங்கப் போறது?" கவலையுடன் கேட்டான்...
கடவுள் காட்டிதான் விடுவாரு... ஊட்டி விடமாட்டாரு... நாமதான் மாமா அள்ளி சாப்பிடனும் .... " என்று முறைபாய் கூறிய ஏழுமலை " நீ இங்கயே இரு நான் போய் மணியக்காரர் வீட்டுல பைக் கேட்டு வாங்கிட்டு வர்றேன் பக்கத்து ஊருக்குப் போய் அங்கருந்து மலையேறினா சீக்கிரமா போகலாம்" என்று கூறியபடி வேகமாக தெருவில் இறங்கி ஓடினான்....

No comments:
Post a Comment