சத்யனின் உள்ளம் ஆயிரம் கடவுளை வேண்டிக்கொண்டு காத்திருக்க போன சில நிமிடங்களில் பைக்கோடு வந்தான் ஏழுமலை..... அவன் கையில் ஒரு கம்பளி போர்வையும் இருந்தது ... சத்யனிடம் பைக்கை கொடுத்து " நீ ஓட்டு மாமா... நான் பின்னாடி உட்காந்து வர்றேன்" என்றான்....
எடுத்தவுடனேயே பைக்கை பறக்க விட்டான் சத்யன்... பக்கத்து ஊர் சென்று மலையடிவாரம் சென்றபோது அப்போதுதான் புகை நெருப்பாக மாறிக்கொண்டிருந்தது....
ஏழுமலை இறங்கிக் கொள்ள ... சத்யன் பதட்டமாக பைக்கை போட்டுவிட்டு மலையை நோக்கி ஓட .. சத்யனை தடுத்து நிறுத்திய ஏழுமலை " அவசரப்படாத மாமா" என்றபடி இழுத்து சென்று பக்கத்தில் இருந்த குட்டையில் நீரை அள்ளி சத்யன் மீது ஊற்றிவிட்டு கம்பளியையும் தண்ணீரில் நனைத்து சத்யன் மீது போர்த்திவிட்டான் .. " போய் கழுத்து மேலயே ரெண்டு போட்டு இழுத்துட்டு வா மாமா" என்றான்
சத்யன் நிதானத்துடன் கம்பளியால் தலை வரை மூடிக்கொண்டு புகைந்து கொண்டிருந்த நெருப்பைத் தாண்டி வேகமாக மலையில் ஏறினான்.... மலையின் உச்சியை அடைந்து மான்சியை தேடினான்... அதோ அங்கே.... நெருப்போடு நெருப்பாக கலக்கும் ஆர்வத்தோடு அவனுடைய மான்சி....
மான்சி உச்சி மலையின் நடுவே சம்மணமிட்டு அமர்ந்து எரிந்து கொண்டு தன்னை நெருங்கும் நெருப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள்
மான்சியை நெருங்கிய சத்யன் நீர் சொட்டும் ஈரக் கம்பளியை உதறிவிட்டு அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்... வெளியே நிஜத்தில் எரியும் நெருப்பை விட இருவருக்குள்ளும் எரியும் நெருப்பின் ஜ்வாலை இருவரின் விழிகளிலும் தெரிந்தது... சத்யனின் கண்களில் காதல் நெருப்பு... மான்சியின் விழிகளில் தன்மானத்தை காத்துக்கொள்ள போராடும் பத்தினியின் நெருப்பு
சத்யனின் உன்னதமான காதல் கொடுத்த உரிமையுடன் பேச ஆரம்பித்தான் " ஏன்டி இப்படி பண்ற ?..... நான் என்ன பாவம் செஞ்சேன்? எனக்கு கொலைகாரன்னு பட்டம் வாங்கி குடுத்துட்டு போகனும்னு எத்தனை நாளா எண்ணியிருந்த?....." சரி என்னை விடு அந்த பச்சப் புள்ளை என்னடி பாவம் பண்ணுச்சு? வா மான்சி.... " என்று அவள் கையைப் பிடிக்க முயன்றான்...
சீற்றத்துடன் நிமிர்ந்த மான்சி கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டு " ஏன்னா கேட்குற? ஒனக்குப் புரியலையா?........ நீ தொட்ட பாவத்தை நெருப்பால கழுவ வந்திருக்கேன் " ...... என்றாள்
சத்யனுக்குப் புரிந்து போனது.... ஓ நான் தொட்டதால் தானா?.... தோற்றுப் போன உணர்வுடன் மவுனமாக அவள் முகத்தையேப் பார்த்தான் ...... " அப்ப நான் தொட்டதால செத்துப் போகலாம்னு வந்திருக்க?" என சத்யன் கேட்க....
மான்சியின் தலை ஆமாம் என்பது போல் அசைந்தது.... வீம்புடன் முழங்காலை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் ......
சத்யனிடம் மீண்டும் மவுனம்... இழந்து விட்ட காதல் அவனை ஏளனம் செய்ய... வந்த கண்ணீரை அடக்குவது அதைவிட சிரமமாக இருந்தது .... மெல்ல எழுந்து கொண்டான்.... ... குனிந்து மான்சியைப் பார்த்தான்.... " எனக்கு சொந்தமில்லாத உன்னை மனசுல இத்தனை நாளா நெனைச்சதும் தப்பு தான்..... எனக்கு உரிமையில்லாத உன்னை தொட்டதும் தப்பு தான் ......... இனிமேல் இதுபோல் நடக்காது.... நான் உசுரா நேசிக்குற என் காளைகள் மேல சத்தியமா சொல்றேன் உரிமையில்லாத உன்னை தொட மாட்டேன்... உன் எதிரில் கூட வரமாட்டேன் மான்சி .... " என்று சத்யன் சொல்லும் போது மான்சி நிமிர்ந்துப் பார்க்க......
சத்யன் கையெடுத்துக் கும்பிட்டான் " என்னை மன்னிச்சிடு மான்சி" என்றவனின் கண்ணீர் அன்னாந்துப் பார்த்த மான்சியின் நெற்றியில் விழுந்தது....
சத்யன் கூறிய மொழிகளை விட அவனது கண்ணீர் மான்சியை அசைத்துப் பார்த்தது... ஆனால் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை மான்சி...
நெருப்பு அவர்களை நெருங்கியதன் அடையாளமாக சடசடவென்று மஞ்சி வெடிக்கும் சப்தம் வெகு அருகில் கேட்டது.... அசையவில்லை இருவரும் இருவரையும் பயப்படுத்த நினைத்த நெருப்பு தோல்வியுடன் சுற்றிச் சுற்றி சுழன்றடித்தது...
" வேணாம் மான்சி ..... என் மேல இருக்குற வஞ்சத்தை அந்த குழந்தை மேல காட்டாத.... அது என்ன பாவம் பண்ணுச்சு.... ஏற்கனவே பிறந்ததும் தகப்பனை முழுங்கிருச்சுன்னு கண்ட நாயெல்லாம் புள்ளைய பழி சொல்லுது... இன்னும் நீயும் போய்ட்டா அதோட கதி என்னாகும் மான்சி?" என்று சத்யன் கண்ணீருடன் கூறியும் மான்சி எழவில்லை ...
" வர மாட்டியா? சரி நானும் இங்கயே இருக்குறேன்.. ரெண்டு பேரும் ஒன்னாவே வெந்து சாகலாம்" என்றபடி மான்சியை விட்டு இரண்டடி தள்ளி அவளைப் போலவே அமர்ந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு நெருப்பை ரசிக்க ஆரம்பித்தான்....
விநாடிகள் நொடிகளாக... காற்று சென்ற திக்கெல்லாம் சுழன்றது அனல்..... கீழேயிருந்து " மாமா ,, மான்சி அக்கா இருக்குதா?" என்ற ஏழமலையின் கூக்குரல் வெடிக்கும் நெருப்பையும் மீறி கேட்டது.....
சத்யன் அசையாமல் அமர்ந்திருக்க.... மான்சி இப்போது பயத்துடன் அவனைப் பார்த்தாள்... " என் கூட சேர்ந்து சாகனும்னு உனக்கு என்ன தலையெழுத்தா ? நீ போ " என்ற மான்சியின் வார்த்தைகள் காதில் விழாதது போல் சத்யன் அமர்ந்திருந்தான்....
சற்றுநேரம் வரை மவுனம் பூதம் போல் அவர்களை காவல் காத்தது ... நெருப்பு இதோ வந்துவிட்டது என்றதும் மான்சி பட்டென்று எழுந்தாள் " நான் கீழ போறேன்" என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு புகைந்து கொண்டிருந்த திசையை நோக்கி இறங்க... சத்யனும் எழுந்தான்...
கீழே கிடந்த ஈரக் கம்பளியை எடுத்து " கொஞ்சம் இரு.... " என்றவன் அவளைத் தீண்டாமல் தலையில் இருந்து கம்பளியால் மூடி " எதையும் யோசிக்காம கடகடனு கீழ இறங்கி போ" என்றவன் தனது ஈர கைலியை கழட்டி தலையில் போட்டுக் கொண்டு " ம் என் பின்னாடியே வா" என்றபடி கீழ் நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான்....
புகையினூடே புகுந்து ஓடி இருவரும் அடிவாரம் வந்தனர்.... இவ்வளவு நேரமாகியும் இருவரையும் காணவில்லை என்றதும் ஏழமலை அழுகையுடன் நின்றிருந்தான் ... மான்சியைப் பார்த்ததும் அருகில் வந்து தலையில் நச்சென்று ஒரு அடி வைத்தவன் " பொண்ணா நீ ?... எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் கூட இப்புடியா பச்சக் கொழந்தைய தவிக்க விட்டுட்டு வருவ?" என்றபடி அழுகையின் ஊடே மான்சியை அடிப்பதற்காக மீண்டும் கையை ஓங்கினான்.... மான்சி அவனை தடுக்கவில்லை ... தலை குனிந்து நின்றிருந்தாள்.....
சத்யன் அவனைத் தடுத்து " வேணாம் மாப்ள... கோவப்பட இது நேரமில்லை ... ஊருக்கு விஷயம் தெரிய வேணாம்... சீக்கிரமா கூட்டிப் போ.. குழந்தையை காமாட்சி ஆயா வீட்டுல விட்டுட்டு வந்தேன் .... மான்சிய வீட்டுல விட்டுட்டு நீ போய் குழந்தையை வாங்கிட்டு வந்து குடு...ஊர்க்காரனுங்க கண்ணுல படாம இதோ இந்த பக்கமா மலையை சுத்திப் போ" .... என்று ஏழுமலைக்கு வழிகாட்டினான்....
" அப்ப நீ எப்புடி மாமா வருவ?" என்றான் ஏழுமலை....
" இல்லடா நீ சீக்கிரமா வண்டியில கூட்டிப் போ... நான் நடந்து வர்றேன்" என்ற சத்யன் கீழே கிடந்த பைக்கை தூக்கி நிமிர்த்தி ஏழுமலையின் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான்...
ஏழுமலை வண்டியை ஸ்டார்ட் செய்து ஏறி அமர... மான்சி அவனுக்குப் பின்னால் ஏறியமர்ந்தாள்.... நிமிரவே இல்லை மான்சி.... வண்டி நகர்ந்தது.... வேகமெடுத்து தூரம் தூரமாய் போய்க் கொண்டே இருந்தது மான்சி சென்ற பைக்....
சத்யன் நின்ற இடத்திலேயே நின்று பைக் கண்ணை விட்டு மறையும் வரைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் ஊருக்கு செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தான்.....
மலையில் எரிந்த நெருப்பு சாம்பலாய் பறந்து வந்து சத்யன் மீது விழுந்தது.... என் காதலும் சாம்பலாய் போய்விட்டதா?..... அல்லது சாம்பல் மேட்டுக்குள் என் காதல் கனன்று கொண்டிருக்கிறதா?....
" நானும் வீரனாய் இருந்தேன் தான்.....
" உன் கோபமெனும் சுழலில் சிக்கி....
" என் உள்ளம் சுக்குநூறாய் உடையும் வரை.....
" எனக்கும் தன்மானம் இருந்தது தான்....
" தங்கமாய் ஜொலிக்கும் உன்....
" அங்கங்களை காணும் வரை.....
" நானும் இரும்பாய் இறுகி இருந்தவன் தான்....
" உனது மீன் விழியில் வீழ்ந்து ...
" நான் தக்கையாய் மிதக்கும் வரை....
" நானும் ஒழுக்கத்தை உயிராய் எண்ணியவன் தான்......
" உன் உதட்டின் ஓரமிருக்கும் மச்சத்தின்.....
" திருடனாய் நான் மாறி ரசிக்கும் வரை......
" நானும் நல்ல காதலனாய் இருந்தவன் தான்.....
" என்னை நீ குற்றவாளியாய் எண்ணி....
" ஒதுக்கித் தூரமாய் தள்ளி வைக்கும் வரை.....
" நான்,, காதலனா?.. கயவனா.?.
" அதையும் நீயே தீர்மானம் செய்து கொள்!!!!
முடிவு எடுக்கும் போது இருந்த உறுதி.... சத்யனின் கண்ணீர் கண்டதும் கரைந்து போனதேன்??????
முத்தமிட துணிந்தவனின் சத்தியத்தை நம்பியதேன் ????
பெற்ற குழந்தையை விட தன்னால் சத்யனின் கௌரவம் குலையக் கூடாது என்று எண்ணியதேன்?????
மான்சிக்குள் ஏகப்பட்ட வாதப் பிரதிவாதங்கள்... இறுதி வரை இரு தரப்புமே ஜெயிக்காமல் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் நிலைமை.... நெஞ்சில் கைவைத்து சுவற்றில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்..... எனக்கு என்னதான் தீர்வு???? நான் மானத்தோட வாழக்கூடாதா???? இறுதியாக இந்த துயருக்கு தீர்வு நான் சத்யன் கண்ணில் படாமல் வாழ்வது தான்.... அதுக்கு ஒரே வழி இங்கிருந்து போயிடனும்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா போகனும்....
ஏழமலை குழந்தையுடன் உள்ளே வந்தான்..... அவனின் முகத்தில் இன்னும் கடுமை மாறவில்லை.... மான்சியின் செய்கையை விட சத்யனின் கண்ணீர் தான் அவனை வதைத்திருந்தது... தூங்கும் சின்னுவை மான்சியின் அருகில் படுக்க வைத்தான்....
" ரொம்ப அழுதான்னு ஆயா கொஞ்சம் பால் ஆத்தி குடிக்க வச்சுதாம்... அப்புறம் தான் தூங்குனானாம்.... நீ ஏதாவது சாப்டு... நான் போய் சத்யா மாமாவை கூட்டிகிட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு நகர்ந்தவனை " ஏழுமலை போன் வச்சிருக்கியா?" என்று கேட்டாள் மான்சி....
" ம்ம் இருக்கு " என்று பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்தவன் " யாருக்கு போடனும்?" என்று கேட்டான்...
" சுகுனா அக்கா நம்பருக்குப் போடு" என்றதும்.... ஏழுமலை யோசனையுடன் மான்சியைப் பார்த்தபடி நம்பரை அழுத்தி ரிங் போனதும் மான்சியிடம் கொடுத்தான்....
வாங்கிய மான்சி " அக்கா நான்தான்" என்றாள்.....
" என்னாச்சும்மா? இந்த நேரத்துல போன் பண்ணிருக்க? என் புள்ளையும் நீயும் நல்லாத் தானே இருக்கீங்க?" என்று சுகுனா பதட்டமாக கேட்க.....
" அதெல்லாம் இல்லக்கா.... நானும் கொழந்தையும் நல்லாத் தான் இருக்கோம்..... நீங்க கூப்ட்டப்பலாம் வரனும்னு தோனலை இப்ப பட்டணத்துக்கே வந்துடலாம்னு இருக்கேன் .... இந்த ஊர்ல என்னால பொழைக்க முடியாதுக்கா... அதான் அங்க வந்து ஏதாவது வேலைக்குப் போய் புள்ளைய காப்பாத்திக்கலாம்னு நெனைக்கிறேன்.... எனக்கு வாடகைக்கு ஒரு வீடு பார்த்து குடுக்கா?" என்று மான்சி கேட்டாள் .....
" நான்தான் அப்பருந்தே இங்க வந்துட சொன்னேன்ல? எதுக்குமா தனியா வூடு? என்கூடவே இரு மான்சி..... நான் உங்க ரெண்டு பேரையும் .... நல்லபடியா பார்த்துக்கிறேன்...... எனக்கு மட்டும் யாரு இருக்கா? ரெண்டும் பொட்டையா பெத்துட்டேன்.... அதது அதுக வழியப் பாத்துகிட்டு போகுதுக... என் புள்ளை தான் என்னையும் தூக்கிப் போடனும் .... அதனால ரெண்டு பேரும் என் கூடவே இருங்க கண்ணுகளா?" என்ற சுகுனாவின் குரலில் கண்ணீர் .....
மான்சிக்கும் கண்ணீர் தான் வந்தது.... தனது நகை பணம் பொருட்கள் என எல்லாவற்றையும் தனது இரு மகள்களுக்கும் பிரித்துக் கொடுத்த சுகுனா.... கோபாலுடன் வாழ்ந்த வீட்டை தனக்குப் பிறகு மான்சியின் மகனுக்குதான் சேரவேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தாள்....
மான்சி எவ்வளவு மறுத்தும் " நான் என்ன ஒனக்கா எழுதி வச்சேன்? எம் புள்ளைக்கு தான தரப்போறேன்.... நீ இதுல தலையிடாத" என்று கண்டிப்புடன் கூறிவிட்டாள்....
கண்ணீரை துடைத்த மான்சி " இல்ல நான் தனியாவே இருக்கேன்க்கா ..... நம்ம புள்ள தான் உனக்கு எல்லாம் செய்வான்.... அதை யாரு தடுக்கப் போறா? ஆனா அக்கா இப்ப உன் மக மருமவன்லாம் வந்து போவாக... நான் அங்க இருந்தா அது நல்லாருக்காது..... உன் வீடு பக்கத்துலயே வாடகை கம்மியா பாருக்கா... நான் அங்க வந்துடுறேன்" என்று மான்சி கெஞ்சுதலாக கூறினாள்....
சற்று நேரம் மவுனமாக இருந்த சுகுனா " நான் என்ன சொன்னாலும் நீ கேட்கப் போறதில்ல.... சரி சரி வீடு பார்த்து வைக்கிறேன்... நல்ல வீடா கெடச்சதும் நானே வந்து உன்னைய இட்டுனு வர்றேன்.... முடிஞ்ச வரைக்கும் இன்னும் ரெண்டு நாளைக்குள்ள வர்றேன் கண்ணு" என்றாள் சுகுனா .....
" சரிக்கா நானும் ரெடியா இருக்குறேன்" என்று கூறிவிட்டு மான்சி போனை ஏழுமலையிடம் கொடுக்க.... போனை அணைத்து பாக்கெட்டில் போட்டவன் " இப்ப என்ன நடந்து போச்சுனு நீ இந்த முடிவு பண்ணிருக்க?" என்று கேட்க....
மான்சி எதுவுமே பேசவில்லை ... மவுனமாக குனிந்து மகனை தூக்கிக்கொண்டு தொட்டிலில் போட்டு ஆட்டிவிட ஆரம்பித்தாள்....
ஏழுமலைக்கு கோபமாக வந்தது... " .... சொனல் புத்தியும் இல்ல... சுய புத்தியும் இல்ல.... எப்புடியாவது போ " என்றுவிட்டு வெளியேப் போனான்....
தொட்டிலில் சினுங்கிய மகனுக்கு மெல்லிய குரலில் தாலாட்டுப் பாடி தூங்க வைத்தாள் மான்சி.......
ஏழுமலை சத்யனை கூப்பிட வந்தபோது அவன் பாதி தூரம் நடந்தே வந்திருந்தான்.... ஏழுமலை பைக்கை கொண்டுபோய் பக்கத்தில் நிறுத்திவிட்டு " உங்க ரெண்டு பேருக்கும் என்னதான் பிரச்சனை? ஏன் இப்புடி இருக்கீங்க?" என கோபமாக கேட்டான்....
மான்சியைப் போலவே சத்யனும் தலையை குனிய .... " ரெண்டு பேரும் இப்புடி ஊமையாட்டம் இருந்தா பிரச்சனை சரியாயிடுமா?.... அந்த லூசு என்னடானா ஊருக்குப் போறேன்னு மூட்டைய கட்டுது.... மெட்ராஸ்ல வீடு பாத்து அங்கயேப் போகப்போகுதாம்... இப்பதான் சுகுனா அக்காகிட்ட போன் பண்ணி பேசுச்சு... நீ எங்க ஓடப் போற?" என்று ஆத்திரம் கலந்த எகத்தாளத்துடன் ஏழுமலை கேட்க....
சத்யன் அதிர்ந்து நிமிர்ந்தான்.... ஊரைவிட்டேப் போறாளா? என் மூஞ்சில முழிக்க முடியாத தூரத்துக்குப் போறாளா? அந்த வீடு? இல்ல இல்ல அவ உதிரத்தால கட்டின கோயில் ? அதைவிட்டுப் போறாளா? ... மான்சிக்கு எவ்வளவு பெரிய கெடுதல் செய்துவிட்டோம் என்று சத்யனுக்கு புரிய... " ச்சே எல்லாம் என்னாலதான்" என்று தலையில் அடித்துக் கொண்டான் ... சுயக் கட்டுப்பாடு இல்லாத நானெல்லாம் மனுசனா? ரெண்டு தங்கச்சி கூட பொறந்துட்டு என்னால ஒரு பொண்ணோட மானத்துக்குப் பங்கம் வந்துருச்சே? தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்...
சத்யனைப் பார்க்க ஏழுமலைக்கு பரிதாபமாக இருந்தது.. " சரி விடு மாமா காலையில பேசுவோம்...... வா போகலாம்" என்று பைக்கை ஸ்டார்ட் செய்தான்... சத்யன் அமைதியாக பின்னால் ஏறி அமர்ந்தான்....
சத்யனை அவன் வீட்டு வாசலில் கொண்டு வந்து விட்ட ஏழுமலை "எதையும் போட்டு குழப்பிக்காம நல்லா தூங்கு மாமா ... நான் காலையில வந்து பாக்குறேன்" என்று கூறிவிட்டு சென்றான்....
சத்யன் வீட்டுக்குள் சென்றான்,, கூடத்தில் படுத்திருந்த பூமாத்தா எழுந்து " ஏன்டா சோத்தை பாதில வச்சுட்டுப் போனவன் இப்பதான் வர்ற.... என்னாதான்டா ஆச்சு ஒனக்கு?" என்று கோபமாக கேட்க....
" இல்லம்மா மலைக்கு வச்ச நெருப்பு பக்கத்து ஊர் வித்தைகாரங்க குடிசைக்குப் போயிடப் போகுதுனு பசங்கல்லாம் பார்க்கப் போனோம்... நான் சோறு போட்டு சாப்ட்டுக்கிறேன்... நீ படுத்துக்கம்மா" என்றுவிட்டு சமையல் செய்யும் கொட்டடிக்குப் போனவன் சும்மா சாப்பிடுவது போல் பேர் பண்ணிவிட்டு தட்டிலிருந்த உணவை சத்தமின்றி கழுநீர் பானையில் கொட்டிவிட்டு வெளியே வந்து படுத்துக் கொண்டான்
படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை.... அவனால் மான்சி இந்த ஊரை விட்டேப் போகப் போகிறாள் என்ற செய்தி நெஞ்சு முழுவதும் விஷமாய் நிறைந்திருந்தது .... தான் எவ்வளவு இழிந்து போனோம் என்று எண்ணிய நிமிடம் இறந்து போனது போல் உணர்ந்தான்....
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
விடிய விடிய விழித்துக் கிடந்த சத்யன் அதிகாலை சூரியனை விட சிவந்து போன கண்களுடன் எழுந்தான்....... மனதின் குழப்பம் புத்தியை தெளிவில்லாம் கொண்டு செல்ல .... காளைகளை வயலுக்கு ஓட்ட மனமின்றி மீண்டும் சோர்ந்து படுத்துக்கொண்டான் ....
நன்றாக விடிந்ததும் அவன் சித்தப்பா வந்து " இன்னா சத்தி ஒடம்பு சரியில்லையா... மாட்டை ஓட்டலையா? " என்று கேட்க....
நிமிர்ந்து பார்த்த சத்யன் " காலங்காத்தால தலைவலிக்குது சித்தப்பா.... மாட்டை ஓட்டிப் போய் மோட்டுக் கழனில கட்டு சித்தப்பா....... நான் பொறவு வர்றேன் " என்று சத்யன் சொன்னதும் அவர் தலையசைத்துவிட்டு கிளம்பினார்....
சத்யன் படுத்தே கிடக்க.... காலியிருந்த வயிறு சத்தமிட ஆரம்பித்தது.... இப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்ற... எழுந்து சென்று முகம் கழவினான்.....
சமையல் செய்த பூமாத்தா " தலைவலிக்குதுனு சொன்னியாமே சத்யா... மிளகும் இஞ்சியும் போட்டு வரக்காப்பி வைக்கிறேன் கொஞ்சம் குடி சரியாப்போகும்.." என்று சொல்ல......
சத்யன் சரியென்று தலையசைத்து விட்டு கூடத்துக்கு வந்தவன் ... ஏதோ தோன்ற... " அம்மா நான் அன்பு வீட்டுக்குப் போய்ட்டு வரலாம்னு இருக்கேன்... ரெண்டு நாளைக்கு மாடுகளைப் பார்த்துக்க சொல்லி சித்தப்பாகிட்ட சொல்லிட்டுப் போறேன் " என்று கூற...
அவனை யோசனையுடன் பார்த்த அம்மா " நீ போறதப் பத்தி ஒன்னுமில்ல... ஆனா நாளைக்கு செல்லியம்மன் கோயில் பொங்கல் வைக்கிற திருநாள் ... இப்பப் போய் ஊருக்குப் போறேனு சொல்றியே?" என்றாள்....
" இல்லம்மா... அது பொம்பளைக பொங்கல் வச்சு சாமி கும்பிடப் போறீக.... நான் இருந்து என்னா செய்யப் போறேன்?.... மறாநாள் சாமி ஊர்வலம் வர்றதுக்குள்ள திரும் வந்துடுறேன்" என்றான்.....
பூமாத்தா அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை.... இருக்கும் சூழ்நிலையில் மகன் கொஞ்ச நாள் மகள் வீட்டில் தங்கிவிட்டு வருவது தான் நல்லது என்று நினைத்தாள்.....
சரியாக ஒன்பது மணிக்கு குளித்து சாப்பிட்டு அன்பரசியின் வீட்டுக்கு கிளம்பினான்.... ஊரைவிட்டு செல்லும் மான்சியை கானவேண்டியிருக்காது என்ற நினைப்பில் சென்றான் சத்யன்...
நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நமக்கு மேல இருந்து எல்லாத்தையும் வேடிக்கைப் பார்க்கிறவன் கணக்கு என்னாவது????
திண்டிவனத்தில் இறங்கி சண்முகத்தின் கடைக்கு செல்ல நினைத்தான்.... ஆனால் அவனது மனக் குழப்பத்திற்கு ஏதாவது செய்தால் தான் கொஞ்சமாவது தங்கையின் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்ற வழியில் இருந்த டாஸ்மார்க் கடையினுல் நுழைந்தான்....
சத்யன் ரெகுலர் குடிகாரன் இல்லை.... விஷேச நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சமாக குடிப்பதுண்டு... ஏன் சண்முகமும் இவனும் சேர்ந்து கூட நிறைய முறை குடித்திருக்கிறார்கள்.... ஒரு குவாட்டர் MC வாங்கி அங்கேயே குடித்துவிட்டு நிதானத்தை விடாமல் சண்முகத்தின் கடைக்கு வந்தான்....
மச்சானைப் பார்த்ததும் வேகமாக எழுந்து வந்த சண்முகம் சத்யனின் முகத்தைப் பார்த்ததுமே குடித்திருக்கிறான் என்று புரிய " வா மச்சான் வீட்டுக்குப் போகலாம்" என்று தனது பைக்கில் சத்யனை அழைத்துக் கொண்டு வந்தான்....
குடித்துவிட்டு தங்கையின் வீட்டுக்கு வருவது சத்யனுக்கு சங்கடமாகத்தான் இருந்தது... ஆனால் தனது மனநிலை எல்லோரிடமும் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்ற பயம்தான் அவன் மதுவைத் தொட்டது.....
சத்யனுடன் வீட்டுக்குள் நுழையும் போதே " அன்பு யாரு வந்திருக்காங்கனு பாரு" என்று குரல் கொடுத்துக் கொண்டே சென்றான் சண்முகம்...
தனது ஏழுமாத கர்ப்பிணி வயிற்றைத் தூக்கிக்கொண்டு வந்த அன்பரசிக்கு தனது அண்ணனை கண்டதும் சந்தோசம் தாங்கவில்லை .... வேகமாக வந்து சத்யனின் கையைப் பற்றியவள் " வா அண்ணே... அம்மா நல்லாருக்கா?" என்று கேட்டவள் சத்யனிடம் வந்த வாசனையில் அவனை கண்டுகொண்டு தன கணவனைப் பார்க்க...
சண்முகம் லேசாக தலையசைத்துவிட்டு " அன்பு நீ போய் மதியத்துக்கு சூப்பரா சாப்பாடு ரெடி பண்ணு... உன் அண்ணன் கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றான்....
சரியென்று தலையசைத்து அன்பரசி நகர்ந்து விட ... " வா மச்சான்" என்று சத்யனை தோளோடு அணைத்து பக்கவாட்டில் இருந்த அறைக்கு அழைத்து சென்று அங்கிருந்த கட்டிலில் சத்யனை அமர வைத்து விட்டு சென்று ஒரு கைலியை எடுத்து வந்து கொடுத்தான்....
" இதை கட்டிகிட்டு படுத்து தூங்கு மச்சான்... நான் மதியம் வந்து சாப்பிட எழுப்புறேன்" என்று அன்புடன் சொல்ல... சத்யனுக்கு கண்கள் கலங்கியது... சண்முகத்தின் கையை இழுத்து பிடித்துக் கொண்டு " என்னால தாங்க முடியலை சண்முகம்... அதான் குடிச்சேன்... மன்னிச்சிடு மாப்ள" என்று கூற...
" யோவ் என்னய்யா நீ மன்னிப்புலாம் கேட்டுகிட்டு? .... நீ கொஞ்ச நேரம் தூங்கு .... நைட் தூங்கலைனு உன் மூஞ்சியப் பாத்தாலே தெரியுது" என்ற சண்முகம் சத்யனை எழுப்பி நிற்க வைத்து கைலியை தலை வழியாக மாட்டி விட்டு வேட்டியை அவிழ்த்து கொடியில் போட்டான்.... சத்யனை படுக்கையில் " தூங்கு மச்சான்... எதுவாருந்தாலும் சாயங்காலம் பேசலாம்" என்றான்....
சத்யனும் மறுக்கவில்லை... இரவெல்லாம் தூங்காததும் போதையும் சேர்ந்து இமைகளை அழுத்தியது ... கண்களை மூடி சில விநாடிகளில் உறக்கம் வந்து இறுக்கியணைத்துக் கொண்டது
தூங்கும் சத்யனையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான் சண்முகம்..... தனது திருமணத்தின் போது பார்த்த சத்யனுக்கும் இவனுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்? ....
காதல் தோல்வி ஒரு மனிதனை இந்தளவுக்கு தின்று தீர்க்குமா? எப்போதும் நிரந்தரமாய் நாலுநாள் தாடி.... கண்கள் இருந்தும் அதில் ஜீவனில்லை... ... ஓயாத நினைவோட்டத்தால் விழுந்த நெற்றி சுருக்கங்கள்... நீர் பசையின்றி காய்ந்து போன உதடுகள்.... கன்னச் சதை வற்றி குழிந்து போன கன்னங்கள்.. நிறந்தரமான சோகத்தை தாங்கிய முகம்.... உடுத்தும் ஆடையில் கவனமின்றி எதையோ சுற்றிக் கொண்டு அலைவது என சத்யனிடம் ஏகப்பட்ட மாற்றங்கள்....
மான்சி கணவனோடு நன்றாக வாழ்கிறாள் என்ற செய்தியாவது சத்யனை கொஞ்சம் உயிர்புடன் வைத்திருந்தது... ஆனால் அவள் கைம்பெண்ணாக வாழ வழியின்றி வந்ததும் சத்யனின் உயிர் ஒடுங்கித்தான் போனது..... இவ்வளவு நேசம் வைத்திருந்தும் அது பொய்யாய்ப் போனதில் சண்முகத்துக்கு ரொம்பவே வருத்தம்....
அறை வாசலில் நிழலாடுவதை கண்டு நிமிரந்தவன் மனைவியைப் பார்த்துவிட்டு எழுந்து வெளியே வந்தான்.... கணவனின் கையைப் பிடித்து கண்கலங்கிய அன்பரசி " என்னங்க அண்ணே இப்புடியிருக்குது?" என்று கவலையுடன் கேட்க.....
" தெரியலை அன்பு,, ஊர்ல ஏதோ பெருசா நடந்திருக்கு ... அதான் இப்புடி இருக்கான்.... இல்லேன்னா வரும்போதே குடிச்சிட்டும் வரமாட்டான்.... அந்த மான்சி வாழ்க்கையை இழந்து என்னிக்கு ஊருக்குள்ள கால வச்சாளோ அதுலருந்து இவன் வாழ்க்கை நாசமாப் போச்சு... என்ன செய்றதுனும் புரியலை.... ஏதாவது பொண்ணப் பார்த்து கல்யாணத்தை பண்ணலாம்னு பாத்தா இவன் ஒத்துக்கவே மாட்டான் போலருக்கு" என்று சண்முகம் கவலையுடன் கூறினான்....
சாயங்கலமா எங்கயாச்சும் கூட்டிப் போய் பேசிப் பாருங்க... நாமலும் இப்புடியே இருந்தா அவரு வாழ்க்கை என்னாகுறது? ஒரு தகப்பனா இருந்து எங்களுக்கு எல்லாம் செய்தவரு... இன்னைக்கு அவரு இப்புடி இருக்குறத பாத்தா ரொம்ப வேதனையா இருக்குங்க" என்ற அன்பரசியின் கண்ணீர் கன்னங்களில் வழிய....
சண்முகம் பதட்டமாக அவள் கன்னீரைத் துடைத்து " எல்லாம் நான் பார்த்துக்கிறேன் அன்பு... நீ இந்த சமயத்துல அழாத அன்பு" என்றான் ஆறுதலாக.....
பிறகு பூக் கடைக்கு போன் செய்து ஆர்டர் வேலைகளை கவனிக்குமாறு சொல்லிவிட்டு மனைவிக்கு உதவியாக சமையலில் இறங்கினான் சண்முகம்.... சமையல் செய்தபடி இருவரும் சத்யனைப் பற்றிதான் பேசினர்
உணவு ரெடியானதும் தயாராக வைத்து விட்டு சண்முகம் சென்று சத்யனை எழுப்பினான்.... எழுந்த பிறகு தான் இங்கே வந்த நிலை மனதில் உரைக்க சத்யன் சங்கடமாக விழித்தான் ....

No comments:
Post a Comment