Saturday, May 13, 2017

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 20

" அட வா மச்சான் சாப்பிடலாம்.... என்னமோ பொம்பளை மாதிரி நெளியிற" என்று இலகுவாக பேசி சத்யனை சாப்பிட அழைத்துப் போனான் ...

தங்கையின் முகத்தை நிமிர்ந்து பார்க்க கூசி " நல்லாருக்கியா அன்பு?" என்று நலம் விசாரித்தான்.....

" ம்ம் நான் நல்லாருக்கேன் அண்ணா... நீ கை கழிவிட்டு வாண்ணா சாப்பிடலாம்" என்று புன்னகையுடன் கூறினாள் அன்பரசி....

சண்முகம் சத்யனின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட அன்பரசி இருவருக்கும் பரிமாறினாள்.... உணவை வெறுத்து சிரத்தையின்றி உண்ட சத்யனை இருவரும் வற்புறுத்தி கொஞ்சமாவது உண்ண வைத்தனர்

சாப்பிட்டு முடித்து வந்து கூடத்தில் அமர்ந்தனர் " மச்சான் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு பைக்லயே மயிலம் முருகன் கோயிலுக்குப் போய்ட்டு வரலாம் " என்று சண்முகம் சொல்ல....

" நான் வரலை மாப்ள... நீயும் அன்பும் போய்ட்டு வாங்க.... நான் கடையில போய் இருக்கேன்" என்று கூறி மறுத்தான்...

" மாப்ள ,, உன் தங்கச்சி இப்ப மலையேறக் கூடாது ,, அங்க ஒரு கல்யாண ஆர்டர் இருக்கு மாப்ள... எப்புடி பூ அலங்காரம் வேணும்னு கேட்டுகிட்டு வந்துடலாம்.. சும்மா மறுத்து பேசாம வா மாப்ள" என்று உரிமையுடன் அதட்டினான் சண்முகம்....

சற்று நேர ஓய்வுக்குப் பின் சண்முகம் கஷ்டப்பட்டு சத்யனை தள்ளிக் கொண்டு மயிலம் கிளம்பினான்... ஆர்வமின்றி வந்தவனை முருகன் அழகாக வரவேற்றார்.... ஏனோ முருகனை தரிசித்ததும் மீண்சும் மனம் குமுறியது.... நெஞ்சை புண்ணாக்கும் துக்கத்தையும் துயரத்தையும் அவரிடம் கொட்டிவிடத் தான் நினைத்தான் ... ஆனால் சூழ்நிலைதான் தடுத்தது... வழிய முயன்ற கண்ணீரை அடக்கியபடி முருகனை கும்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்...

முருகன் இவனுக்கு நிம்மதியை கொடுக்க தனது பெயர் கொண்டவனையே கூடவே அனுப்பினார் போல..... விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு இருவரும் வெளியே வந்து ஒதுக்குப் புறமாய் சென்று அமர்ந்தனர்...

சத்யனின் பார்வை நிலையின்றி எதையோ வெறிக்க..... அவன் கையைப் பற்றிய சண்முகம் " ம் இப்ப சொல்லு ஊர்ல என்ன நடந்தது மாப்ள ?" என்று கேட்டான்.....

சத்யன் எதையும் சொல்லாமல் தலை குனிய ..... " மாப்ள இதுக்கு மேலயும் உன்னைய இந்த மாதிரி என்னால பாக்க முடியாது.... நீ இப்ப சொல்லலைனா நானே ஊருக்கு வந்து அந்த பொண்ணைப் பார்த்து விசாரிக்க வேண்டிருக்கும்" என்று சண்முகம் மிரட்டலாக கூற.....
தங்கை கணவனின் அக்கரையான பேச்சால் நிமிர்ந்த சத்யனின் கண்கள் குளமாகியிருந்தது " மான்சி ஊரைவிட்டே போகப் போறா சண்முகம்..... அதுவும் என்னால தான் ஊரைவிட்டுப் போறா" என்றான் ... சொல்லி முடித்தவன் கைகளால் முகத்தை மூடிக்கொள்ள....

சண்முகம் தனது திகைப்பை மறைத்து " ஏன் மாப்ள ? நீ என்னப் பண்ண? ஊரை விட்டே போறளவுக்கு அப்படியென்ன பிரச்சனை ?" என்று சத்யன் இதயத்தை வார்த்தையால் கிளறி உள்ளிருப்பதை வெளிக்கொனர முயன்றான்....

அவனது தூண்டில் சரியாக வேலை செய்தது..... குமுறிக் கொட்டினான் சத்யன்.... நடந்தது அத்தனையும் ஒன்று விடாமல் சொன்னான்... மான்சியை முத்தமிட முயன்றதை சொல்லும் போது முகத்தை மூடிக் கொண்டு " அவ துயரத்துக்கு தோள் கொடுக்க வேண்டிய நானே அவளை மேலும் அசிங்கப்படுத்திட்டேன் சண்முகம்.... அவ பாவம் மச்சான்" என்று கதறியவனை இழுத்து தோளில் சாய்த்தான் சண்முகம்....

சிறிது நேரம் கழித்து சத்யனின் கண்ணீர் கொஞ்சம் அடங்கியதும் " அப்ப நீ தொட்டதால தான் அந்த பொண்ணு மலைக்கே நெருப்பு வச்சிட்டு அது நடுவுல போய் நின்னாளா?...... " என்று கூர்மையாக சண்முகம் கேட்க... சத்யன் ஆம் என்று தலையசைத்தான்

" இதென்ன புதுசா இருக்கு? மாமனார் இவ கையப் புடிச்சு இழுத்தப்ப போலீஸ் ஸ்டேசன்ல போய் நின்னவ ... நீ தொட்டதும் ஏன் தன்னையே அழிச்சிக்க நினைச்சா? உன்னையும் உள்ளத் தள்ள வேண்டியது தான?" சண்முகம் நுனுக்கமாக கேட்க ...

சத்யன் குழப்பமாகப் பார்த்தான்....... 

" சரி அது அவ விருப்பம்... அது நமக்கு வேணாம்.... உன் மேட்டருக்கு வருவோம்.... இவ்வளவு நாளா ஒழுங்கா இருந்துட்டு இப்ப போய் ஏன் அவ மேல கைய வச்ச? சும்மா ஆசைக்கு தொட்டு பாத்தியா மாப்ள?" என்று கேட்டவனின் குரலில் இருந்த நக்கல் சத்யனுக்கு வலித்தது....

தலையை கவிழ்ந்தவன்... " ஆசைக்குத் தொட்டுப் பாக்குறவன் நான் இல்லை சண்முகம்...... அவ நல்லாருக்கனும்னு ஒவ்வொரு நாளும் சாமிய கும்பிடுறவன் நானு" என்றான்....

" அப்படிப்பட்டவன் ஏன்யா அந்த மாதிரி நடந்துகிட்ட? உனக்கு சொந்தமானவன்னா நினைச்ச?" சண்முகம் முடிக்கும் முன்...

சட்டென்று நிமிர்ந்த சத்யன் " ஆமா ,, அவளை என்கிட்ட இருந்து பிரிச்சுப் பாக்கவே முடியலை மச்சான்.... அவ முழுசா என்னோட கலந்துட்டா.... இனிமே என்னால விலகி இருக்க முடியாது மச்சான்" என்று உள்ளிருந்ததை படபடவென கொட்டினான் சத்யன்.....
சரி அப்புடியே இருக்கட்டும்.... இப்பதான் விதவைங்க மறுமணம் சகஜம் போச்சே... ஊர்ல நாலு பேரை வச்சு பேசி அந்த பொண்ணை கல்யாணம் செய்துக்கறது தான.... அதைவிட்டுட்டு இப்புடி நடுவீதில அவளை தொட்டுப்புட்டு வேதனையோட வந்து நிக்கிறயே மாப்ள?" என்று சண்முகம் சொல்ல.....

" இல்ல மச்சான் அவ நிச்சயம் என்னைய ஏத்துக்க மாட்டா.... காலம் பூராவும் அவளை நினைச்சு நினைச்சு சாக வேண்டியதுதான் நான்" என்று நெற்றியில் அடித்துக் கொண்டான் சத்யன்....

சத்யன் ஏன் அப்படி சொல்றான் என்று சண்முகத்துக்குத் தெரியும்.... சத்யனின் உதாசீனம் தான் அவனுக்கு எதிராக நிற்கிறது என்று தெரியும்..... மயிலம் முருகனின் கோபுரத்தைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான் சண்முகம்......

பிறகு மெதுவாக எழுந்து " சரி வா மாப்ள... நாளைக்கு பேசலாம்... நேரமாச்சு... அன்பு வீட்டுல தனியா இருப்பா" என்று முன்னால் நடக்க ... சத்யன் தனக்கு விடியவே விடியாதா என்று முருகனை கும்பிட்டுவிட்டு சண்முகத்தின் பின்னால் போனான்......

இருவரும் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு படுத்தனர்.... சத்யன் ஹாலில் படுத்துக் கொள்ள..... சண்முகம் தனது அறையில் மனைவியுடன் படுத்து அவள் வயிற்றிலிருக்கும் தனது வாரிசை வருடியபடி எல்லாவற்றையும் ஒப்பித்தான்.....

" இப்ப என்னங்க செய்றது?" என மனைவி கவலையுடன் கேட்க.....

" ம்ம் இரு ஏதாவது செய்யலாம்.... இவனை இப்படியே விட்டா சட்டைய கிழிச்சுகிட்டு மெண்டலா சுத்த ஆரம்பிச்சுடுவான்" என்றவன் எழுந்து அமர்ந்து " ஏன் அன்பு நாளைக்கு ஊர்ல திருவிழானு சொன்னேல்ல?" என்று கேட்க...

" ஆமாங்க.... செல்லிம்மா கோயில் திருநா....." என்றாள் அன்பரசி...

" எல்லாரும் பொங்கல் வைக்க வருவாங்களா?" என்று சண்முகம் யோசனையுடன் கேட்டான்

" ஆமா... சுத்தி இருக்குற நாலு ஊரு பொம்பளைகளும் வந்து பொங்கல் வைப்பாங்க ... ஏன் கேட்குறீங்க?" என்றவளுக்கு " சும்மாதான்" என்று கூறிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்....

மறுநாள் காலை சண்முகம் எழுந்து குளித்து சாப்பிட்டு வெளியே கிளம்பிய போது சத்யனும் உடன் வர.... " நீ இரு மாப்ள... நான் வந்து கூட்டிட்டுப் போறேன்" என்றவன் " அன்பு ரெண்டு நாள் முன்னாடி கல்யாண அலங்காரம் ஆர்டர் ஒன்னுக்கு அட்வான்ஸ் குடுத்தாங்களே.... அந்த பணத்தை எடுத்துட்டு வா" என்றான்....

அன்பரசி பணத்தை எடுத்து வந்து கொடுத்ததும்... " இரு மாப்ள இதோ வர்றேன்" என்று அவசரமாக பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான் சண்முகம்....

அவன் திரும்பி வர ஒரு மணி நேரமானது.... வந்ததும் " மாப்ள கிளம்பு " என்று சத்யனை அழைத்துக் கொண்டு பைக்கில் புறப்பட்டான்....

சற்றுநேரம் கழித்துதான் பைக் தனது ஊர் செல்லும் பாதையில் போவதை கவனித்து " ஊருக்குப் போறியா சண்முகம்? இன்னும் ரெண்டுநான் இங்கயே இருக்கலாம்னு நெனைச்சேன்" என சத்யன் வருத்தமாக சொல்ல....

" ம்ம் இன்னொரு முறை வந்தா தங்கலாம்.... இப்ப ஒரு முக்கியமான வேலையிருக்கு பேசாம வா மச்சான்" என்று சமாதானம் செய்தபடி பைக்கை ஓட்டினான் சண்முகம்....

சத்யன் மேலும் எதுவும் கேட்கவில்லை ... அமைதியாக வந்தான்

ஊர் வந்தது ... வீட்டுக்கு போகாமல் செல்லியம்மன் கோயிலுக்கு பைக்கை விட்டான் சண்முகம்.... " என்ன மச்சான் வீட்டுக்குப் போகாம இங்க வந்துட்ட?" என சத்யன் கேட்க.... அவனுக்குப் பதில் சொல்லாமல் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி கோயிலை சுற்றி பார்வையை ஓட விட்டான்...

பெண்கள் அனைவரும் வரிசை வரிசையாக பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர்.... சத்யனின் பார்வையில் தூரத்தில் ஓரமாக அமர்ந்து பொங்கல் வைத்துக் கொண்டிருந்த மான்சி தான் தெரிந்தாள்.....

சண்முகம் சத்யனின் தோளில் கைவைத்துத் திருப்பி " அந்த பொண்ணு தான மான்சி?" என்று கேட்க...

மான்சியின் மீதிருந்த கண்களை அகற்றாமல் தலையை அசைத்தான் சத்யன்....

" சரி அப்போ இதை எடுத்துட்டுப் போய் அவ கழுத்துல கட்டு மாப்ள" என்று சண்முகம் சத்யனின் முன்பு ஒரு பொட்டலத்தை நீட்ட.... சத்யன் குழப்பத்துடன் குனிந்துப் பார்த்தான் ....

பார்த்தவன் அதிர்ந்தான்... அந்த ஜரிகை பேப்பரில் தங்கத் தாலி ஒன்று மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு குங்குமத்தில் கிடந்தது .... " மச்சான் என்னது இது?" என்று அதிர்சியுடன் கேட்க....

" ம் தாலி மாப்ள... எடுத்துப் போய் கட்டு" என்று அதட்டினான் சண்முகம்...

" அது தெரியுது மச்சான்... ஆனா சும்மா தொட்டதுக்கே மலையை கொழுத்தி நடுவுல போய் நின்னா..... இதை கட்டுனா என்ன நடக்கும்னு தெரியுமா?" என்று சத்யன் கலவரத்துடன் சொல்ல

எதுவேனா நடக்கட்டும் பரவாயில்லை... மலை என்ன இந்த ஊரையே கூட கொழுத்தட்டும்... ஆனா நீ சொன்னதுக்காக மலையிலருந்து திரும்பி வந்தாள்ல.... அப்ப நிச்சயம் இப்பவும் வருவா .... நான் சொல்றேன் நீ போய் தாலியை கட்டு.... உன்னையும் சேர்த்து கொழுத்தினா கூட பரவாயில்லை.... இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாவுறதை விட ஒரேடியாப் போய் சேரலாம்... ம்ம் போ " என்று சத்யனின் கையில் தாலியிருந்த பொட்டலத்தை கொடுத்து முதுகில் கை வைத்து தள்ளி விட்டான் சண்முகம்....

சத்யன் முதுகு விரைக்க நிமிர்ந்தான்... அவனுக்கும் துணிச்சல் வந்தது.... தாலியுடன் வேகமாக மான்சியை நெருங்கினான்.....

குனிந்து அடுப்பை ஊதிவிட்டு நிமிர்ந்த மான்சி எதிரே சத்யனை கண்டு புருவத்தை சுழித்தபடி எழுந்து நிற்க்க....

சத்யன் பேப்பரில் இருந்த தாலியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் மான்சியின் கழுத்தில் கட்டினான் ... .

நாலு ஊரு மக்களும் கூடி நின்று வேடிக்கைப் பார்க்க.... சத்யன் மான்சியின் கழுத்தில் தாலி கட்டினான்.... 

என்ன நடந்தது என்று யோசித்து மான்சி சுதாரித்து நிமிர்ந்து " அடப்பாவி" என்று அலறியபடி கழுத்தில் இருந்த தாலியை கழட்டி எறிய முயல....

" ஏய்" என்று ஆத்திரமாக கத்திய சத்யன் தாலியை கழட்ட விடாமல் அவள் கையைப் பற்றியபடி மறுகையால் ஓங்கி ஒரு அறைவிட .... முரட்டுக் கரத்தில் அறைவாங்கிய மான்சி பத்தடி தொலைவில் போய் சுருண்டு விழுந்தாள் 

சத்யன் கீழே விழுந்தவளை தூக்காமல் கண்களில் வெறி தெரிக்க " இன்னொரு முறை தாலியில கை வச்ச மவளே கொலை விழும்டி" என்று கத்தினான்....





" நீ,, எனது பூஜைக்காக மலரும் .....

"அல்லிப் பூவானாலும் சரிதான் ...


" என்றுமே எனக்குப் பயன்படாத ...

" அரளிப் பூவானாலும் சரிதான் ...


" நான் மட்டும் உன் பாத மலர்களை அலங்கரிக்கும்

" பாதரட்சையாக என்றும் இருப்பேன் கண்மணி!!!


சில பெண்கள் வந்து மான்சியின் கையைப் பிடித்து தூக்கி நிறுத்தி ... கலைந்த கூந்தலை சரிசெய்தனர்.... அதில் ஒரு மூத்த பெண்மணி.... முற்போக்கு சிந்தனையுடன் " ம்ம் சாமியா பாத்து மறுபடியும் உன்னைய ஒரு நல்லவன் கையில பிடிச்சு குடுத்திருக்கு..... எதையாவது பேசி அதை நாசமாக்கிப்புடாத மான்சி.... சத்யன் நல்ல பய... அவனை அண்டி நல்லபடியா குடித்தனம் பண்ணி பொழைக்குற வழியப் பாரு கண்ணு" என்று ஒரு தாயாய் அறிவுரை சொன்னாள்....

அந்த பெண்ணின் வார்த்தைகள் மான்சியின் காதுகளில் விழுந்ததா தெரியவில்லை ஆனால் கண்கள் சத்யனைவிட்டு இப்படி அப்படி அகலவில்லை...... நெருப்பில் குளிர் காய்ந்துவிட்டு வந்த இரவு தனக்குள் நடந்த போராட்டாங்கள் கேள்விகள் அத்தனைக்கும் விடை தெரிந்தது போல் இருந்தது.... ஆனால் அந்த விடையை ஒத்துக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ தான் அவளால் முடியவில்லை .... கோபாலின் தகப்பனுக்கும் சத்யனுக்கும் என்ன வித்தியாசம் என்று புத்தியில் உரைத்தது.... ஆனால் புத்தி சொல்வதை மனம் ஏற்காமல் முறைத்துக்கொண்டிருந்தது.....

சத்யன் இன்னும் மான்சியின் மகனை அணைத்துக்கொண்டு மான்சியை முறைத்துக் கொண்டும் தான் இருந்தான்.....

சண்முகம் பைக் மேல் சாய்ந்து நின்று அங்கு நடப்பதை சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தானேத் தவிர சத்யனை நெருங்கவில்லை.... கோடு போட்டு கொடுத்துட்டோம்... இனி ரோடு போடவேண்டியது மச்சானோட வேலை.... என்று ஒதுங்கியிருந்தான்.....

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தாமதமாக பொங்கல் வைக்க வந்த பூமாத்தாவிடம் பாதி வழியிலேயே விஷயம் ஒப்பிக்கப் பட்டது.... தலையில் இருந்த பொங்கல் கூடையை கீழே போட்டுவிட்டு .... " அடப்பாவி உனக்கு ஏன்டா புத்தி இப்புடி போகுது" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கோயிலருகே ஓடிவந்தாள்....

வந்தவள் நேராக மான்சியை நெருங்கி " அடிக் கைகாரி,, ரோசக்காரி மாதிரி தனியா வீட்டை கட்டி வாழுறேன் ஆக்ட்டு குடுத்து கடைசில எம் மவனையே கைக்குள்ளு போட்டுகிட்டு காரியத்தை சாதிசிட்டயேடி அரிப்பெடுத்த சிறிக்கி ....." என்றவள் மகன் பக்கம் திரும்பி " அட நாசமாப் போனவனே..... அங்க வச்சேன் , இங்க வச்சேன் ... பொத்தப் பானைக்குள்ள *** வச்சேன்னு போயும் போயும் இந்த முண்டச்சி கழுத்துல தாலி கட்டிருக்கியேடா...... ஒனக்கு படுக்க பொம்பளை வேனும்னு சொல்லிருந்தா ஊரு உலகமெல்லாம் தேடி எவளையாவது கூட்டியாந்து கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே.... இந்த நாரப்பய மவதானா ஒனக்கு கெடச்சா?" என ஓவென்று அலறி தரையில் அமர்ந்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.....

சத்யன் மான்சியைப் பார்த்த அதே கோபப்பார்வையோடு அம்மாவைப் பார்த்தான் " மகனுக்கு கல்யாணம் ஆச்சேன்னு ஒப்பாரி வைக்குற ஆத்தாள இப்பதான் பாக்குறேன்..... என்னைய என்ன வேனும்னாலும் சொல்லு .... உன் மகனா கேட்டுக்குறேன்.... என் பொண்டாட்டிய பேச யாருக்கும் உரிமையில்ல .... அவளை ஏதாவது பேசுன அப்புறம் நான் பொல்லாதவனாயிடுவேன்" என்று கர்ஜித்தான்..... தாயின் தகாத வார்த்தைகள் அவனை ரொம்பவே வெறியனாக்கியிருந்தது....

அய்யோ அய்யோ , என்னை வாயத் தொறந்து ஒரு வார்த்தை பேசமாட்டானே என் மவன்.... இப்ப இப்புடி பேச வச்சிட்டாளே......" என்று அலறிய பூமாத்தா கல்லாய் நின்றிருந்த மான்சியைப் பார்த்து .... " அடிப்பாவி என்ன பொடிப் போட்டு என் புள்ளைய மயக்குனடி? .... ஒனக்கு ஊரு உலகத்துல வேற மாப்ளையா ஆகப்படலை? எம் புள்ளை தானாடி கெடச்சான?.... நீ நல்லாருப்பியாடி பாவி" என்று கத்த கத்த மான்சி அதே வெறித்தப் பார்வையுடன் நின்றிருந்தாள்.....

சத்யனுக்கு கோபம் தலைக்கேறியது " அம்மா இதான் நான் கடைசியா சொல்றது.... உன் புள்ளையா நீ சொன்னதையெல்லாம் செய்தேன்... குடும்பத்துகாக என் கடமையெல்லாம் முடிஞ்சி போச்சு .... இனி எனக்குப் பிடிச்ச மாதிரி நான் வாழ ஆசைப்படுறேன்.... உனக்கு மகன் முக்கியம்னா எங்களை ஏத்துக்க.... இல்லைனா விடு.... ஆனா இனிமே ஒரு வார்த்தை அனாவசியமா பேசுனேன் வை அப்புறம் ஆத்தா புள்ளைங்குற உறவே முறிஞ்சு போயிடும்.... " என்று இவனும் கோபத்தில் வார்த்தையை விட......

" ஓகோ அம்புட்டு தைரியமா? ஏன்டா நம்ம சாதி சனத்து மூஞ்சில எப்புடி முழிப்பேன் நானு..... என் பொண்ணுக வாழப் போன இடத்துல இனி மரியாதை இருக்குமாடா? ...... " என்றவள் வேகமாக எழுந்து அவிழ்ந்த கூந்தலை கொண்டையாக கட்டிக்கொண்டு " இனி எனக்கு ரெண்டு மகளுக தான்னு நினைச்சுக்கிறேன்.... அந்த வீடு எம் புருஷன் சம்பாதிச்சது.... இனி நீ அந்த வீட்டு வாசப்படி ஏறுனா மகன்னு கூடப் பாக்காம வெட்டிப்போடுவேன் ஆமாம்.... அந்த சிறுக்கியோட எக்கேடாவது கெட்டுப் போ...... " என்றவள் அழுதுகொண்டே வீடு போய் சேர....

சண்முகம் இப்போதுதான் மெதுவாக சத்யனை நெருங்கி தோளில் கைவைத்து .... " விடு மச்சான்.... அம்மான்னா அப்புடித்தான்.... எல்லாம் போகப்போக சரியாயிடும்..... எல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்று தைரியம் சொல்லிவிட்டு மான்சியின் அருகில் நின்றிருந்த பெண்களிடம் " ஏம்மா இங்கயே நின்னா பிரச்சனை வந்துகிட்டே தான் இருக்கும்.... அந்த பொண்ணை கூட்டி வந்து சாமி கும்பிட வச்சு வீட்டுல கொண்டு போய் விடுங்கம்மா..." என்று சொன்னான்....

நடந்த சம்பவங்களை ஜீரணிக்க முடியாமல் கால்கள் வேரோட நின்றிருந்த மான்சியை சில பெண்கள் மெதுவாக அங்கிருந்து நடத்தி வந்து கோயிலின் வாசலில் கொண்டு போய் நிறுத்த.... சண்முகம் சத்யனை கோவிலுக்குள் தள்ளிக்கொண்டு போனான்.....

உள்ளே இருந்த பூசாரி இவர்களுக்காக ஒரு அவசரகால பூஜையை தயார் செய்து வேகமாக வெங்கல மணியை அடிக்க..... சத்யன் கையிலிருந்த சின்னுவை அணைத்தபடி உள்ளே பார்த்து சாமி கும்பிட்டான்...... 

மான்சி அம்மனைப் பார்த்தாளா? அல்லது அம்மனையே எரித்தாளா? என்பது போல் செல்வியம்மனை வெறித்துப் பார்க்க..... அவள் நெற்றியில் சத்யனின் வலதுகையின் பெருவிரல் அழுத்தமாக பதிந்தது... ஆம் மான்சி அம்மனிடன் பார்வையால் சண்டையிட்ட அந்தநிமிடம் சத்யன் மான்சியின் நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டிருந்தான்.....

வெள்ளையான வெற்று நெற்றியில் பெரிய வட்டமாக சிவப்பு குங்குமம்.... வைத்த குங்குமத்தை விரலால் ஒதுக்கி சத்யனே சரிசெய்ய... மான்சி கண்களை மூடிக்கொண்டாள்.... மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது .... குங்குமத்தை வைத்த விரல்கள் கீழே இறங்கி அவள் கண்ணீரையும் துடைத்தது....

விஷயம் கேள்விப்பட்டு அப்போது தான் அங்கே வந்த மான்சியின் பெற்றோர் சத்யனைப் பார்த்து கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட..... அவர்கள் பின்னால் வந்த மஞ்சுளா அது கோயில் என்றும் பாராமல் " அடத்தூ மானங்கெட்ட ஜென்மங்களா..... பப்ளிக்கா கூத்தடிக்க லைசன்ஸாக்கும்?" என்று ஏளனமாக பேச.....

' எனக்கு இந்த வார்த்தைகளை வாங்கித் தரத்தானே இவ்வளவும்?' என்பதுபோல் சத்யனை வெறித்துப் பார்த்தாள் மான்சி......

சத்யன் மஞ்சுளாவிடம் திரும்பி " அன்னைக்கே என்கிட்ட நீ அடி வாங்குறது.... இதோ இவளால நீ தப்பிச்ச.... இப்போ எதாவது பேசுன ங்கொம்மால கிழிச்சு கேழ்வரகு நாத்தை நட்டு அனுப்பிடுவேன்..... ஓடிப்போயிறு" என்று ஆத்திரமாய் கத்த... சண்முகம் அவனை அவசரமாக அடக்கி வெளியே அழைத்து வந்தான்....

பெண்கள் மான்சியை முன்னால் அழைத்து செல்ல.... சண்முகம் சத்யனுடன் அவர்கள் பின்னால் சென்றான்...... இப்போது மான்சியுடன் சத்யனின் வீட்டுக்குப் போனால் பூமாத்தா தன் வீட்டின் வாசப்படியில் கூட ஏற விடமாட்டாள் என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தபடியால் யாருமே அந்த பேச்சை எடுக்கவில்லை... இப்போதைக்கு சத்யனுக்கே அடைக்களம் மான்சிதான் தரவேண்டும் என்பதால் எல்லோரும் அவள் வீட்டுக்கே சென்றனர்....

வீட்டை நெருங்கியதும் ஆரத்தி எடுக்கவேண்டுமே என்று வந்த பெண்கள் தயங்கி நிற்க.... எனக்கு எதுவும் வேண்டாம் என்பதுபோல் மான்சி முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி உள்ளே ஓடினாள்......

" சரி விடுங்கம்மா அது தானா சரியாகும் ... நீங்கல்லாம் போய் திருநாள் வேலையைப் பாருங்க" என்று வந்த பெண்களை அனுப்பி வைத்தான் சண்முகம்

சத்யன் இன்னும் வாசலிலேயே சின்னுவை வைத்துக்கொண்டு நின்றிருந்தான்..... சண்முகம் அவன் கண்களுக்கு அந்த மயிலம் முருகனாகவே காட்சி தர .... கையெடுத்துக் கும்பிட்டு " என் வாழ்க்கையை... என் உசுரயே எனக்குத் திருப்பி தந்திருக்கீங்க மாப்ள..... இதை என் உயிர் உள்ள வரைக்கும் மறக்க மாட்டேன்" என்று கண்கலங்கிக் கூற......

சத்யனின் கையைப் பிடித்த சண்முகம் " என்ன மச்சான் இது.?... தங்கச்சி புருஷன்... வீட்டு மாப்ளைனு நினைக்காம உயிர் நண்பனா நெனைச்சு யார்க்குமே தெரியாத விஷயத்தையெல்லாம் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவியே மச்சான்?..... அதுக்கு நான் கைமாறு செய்ய வேணும்ல? அதுதான் இப்படியொரு முடிவு பண்ணேன்.... அதுவுமில்லாம என் சுயநலமும் இதுல இருக்கு மச்சான்... நீ இப்புடி இருக்குறத பாத்து என் அன்பரசி தினமும் அழுவுறா.... அவ மனசு நிம்மதியா இருக்கனும்னா நீ நெனைச்சது கிடைக்கனும்..... அதான் உன்னை கூட கேட்காம முடிவு பண்ணேன்" என்று பெருந்தன்மையுடன் பேசினான்.....

இவன் கணவனாக கிடைக்க தனது தங்கை கொடுத்து வைத்தவளா? அல்லது இவன் மாப்பிள்ளையாக கிடைக்க நான் கொடுத்து வைத்தவனா? சத்யன் நன்றியுடன் சண்முகத்தைப் பார்த்தான்....

வீட்டுக்குள் மான்சி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள்.... 

சண்முகம் சத்யனை ஓரமாக தள்ளிச் சென்று " மச்சான் தாலிதான் கட்டிட்டமேன்னு அத்துமீறி நடந்துக்காத.... அந்த பொண்ணு மனசு எல்லாத்தையும் ஏத்துகிட்டு மனசு மாறுற வரைக்கும் வெயிட் பண்ணு.... அது என்ன சொல்லுதோ அதை கேட்டு நடந்துக்க.... இப்ப கோயிலாண்ட பாய்ஞ்ச பாரு அது மாதிரி முரட்டுத் தனமா நடந்துக்காத.... நான் போய் அன்புக்கு ஒரு போன் பண்ணி பேசிட்டு.... உன்னோட துணியெல்லாம் எடுத்துகிட்டு வர்றேன்" என்று நகர்ந்தனின் கைப் பற்றி " மாப்ள அம்மா?" என்று சத்யன் தயங்க.....

" என்ன ? என்னைய எதாவது சொல்வாங்கனு பயப்படுறியா மச்சான்? நான் அவங்க மருமகன்.... நான் என்ன செஞ்சாலும் ஒதுக்கவும் முடியாது வெறுக்கவும் முடியாது..... அதனால நீ எதுவும் கவலைப்படாத.... நான் சமாளிச்சுக்கிறேன்" என்று புன்னகையுடன் கூறியவன் வீட்டுக்குள் போகுமாறு கண் ஜாடையில் கூறிவிட்டு வெளியே செல்ல.....

சத்யன் எவ்வளவு தான் தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் கொஞ்சம் உதைப்பாகவே இருந்தது..... தோளில் தூங்கிவிட்ட குழந்தையுடன் மெல்ல தலைகுனிந்து உள்ளேப் போனான்....

மான்சி ஒரு மூலையில் கிடந்து அழுதுகொண்டிருக்க .... சத்யன் குழந்தையின் தொட்டிலைப் பிரித்து லாவகமாக குழந்தை அதில் கிடத்தி லேசாக ஆட்டிவிட்டான்.... நன்றாக உறங்குகிறான் என்றதும் தொட்டிலை ஆட்டுவதை விட்டுவிட்டு மான்சியின் அருகில் வந்தான்....

அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..... " இப்ப ஏன் எலவு வீடு மாதிரி அழுதுகிட்டு இருக்குற.... எந்திரிச்சு முகத்தை கழுவிட்டு மதியத்துக்கு சாப்பிட ஏதாவது செய்" என்று இத்துணூன்டு தைரியத்தை வைத்துக்கொண்டு வீரமாய் குரலை உயர்த்திப் பேசினான் சத்யன் ....

மான்சி கோபமாய் நிமிர்ந்து " என்ன திமிரா?.... மொதல்ல இங்கருந்து வெளியப் போ.... இது என் வீடு ... எனக்கும் என் புள்ளைக்கும் தான் இங்க இடமிருக்கு... நீ வெளியப் போ" என்று கத்தினாள்....

மான்சி முகத்தை மூடிக்கொண்டு அழுததில் சத்யன் அவள் நெற்றியில் வைத்த குங்குமம் கலைந்து போயிருந்தது.... சத்யன் அவள் முன் மண்டியிட்டான்.... " வீட்டுல இடம் இல்லைனா என்ன? இந்த வீட்டு திண்ணையில இடமிருக்கே? அங்க இருந்துக்கிறேன்... நீதான அன்னிக்கு நாய்னு என்னை திட்டின? இனி இந்த நாய் உனக்கு காவலா வெளியவே இருக்கும்.... நீ எப்ப கூப்பிடுறியோ அப்பதான் உள்ள வரும்" என்றவன் கலைந்த குங்குமத்தை சரிசெய்ய அவள் நெற்றியை நோக்கி கையை எடுத்து செல்ல.....

அவன் கையை பட்டென்று தட்டிவிட்ட மான்சி..... " ஏன் உனக்கு புத்தி இப்புடி போச்சு? ஏற்கனவே ஊர் பூராவும் என் பேரை தூத்தி விட்டுட்டா என் அண்ணி.... இப்ப நீ செஞ்ச காரியத்துக்கு இன்னும் என்ன கேவலப்படுத்தப் போறாங்களோ தெரியலை.... ஒருத்தனுக்கு மட்டும் பொண்டாட்டியா இருந்து வாழ்ந்து சாகனும்னு நெனைச்ச என் நெனப்புல மண் அள்ளிப் போட்டுட்டயே பாவி .. நான் என்னப் பாவம் பண்ணேன்னு என்னை இப்புடி சீரழிக்கிறானோ அந்த சாமி?" மான்சி புலம்பி கொட்டினாள்...

சத்யன் எதையுமே காதில் வாங்கவில்லை.... " நாம ஒன்னும் ஊருக்காக வாழப் போறதில்லை ... நாம நமக்காக வாழ்ந்தாப் போதும்.... எந்த நாதாரிக்கும் பயப்படனும்னு அவசியமில்லை..... நீ மொதல்ல எழுந்து போய் முகத்தை கழுவிட்டு நெத்தில குங்குமம் வை ... நான் வச்சது கலைஞ்சு போச்சு பாரு" என்று மான்சியின் நெற்றி குங்குமத்திலேயே கவனமாக இருந்தான் ....

மான்சிக்கு ஆத்திரம் தலைக்கேறியது " ஏய் நீ என்ன லூசா? நான் சொல்றது எதுவுமே காதுல விழலையா? மொதல்ல இங்கருந்து வெளிய போடா " என்று உச்ச குரலில் கத்த....

" என்னது போடா வா ? அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்னு சரியாத்தான் சொல்லிருக்காங்க" என்றவன் அவள் கூந்தலைப் பற்றி கையில் முறுக்கிக்கொண்டு தூக்கி நிறுத்த.... வலி தாங்காமல் " முடிய விடுடா" என்று அலறினாள் மான்சி....

சத்யன் தனது பிடியை கொஞ்சம் கூட தளர்த்தாமல் அவள் முகத்தை நெருங்கி " இனி இந்த வாடாப் போடானு கூப்பிடுற வேலை வேணாம்... புருஷனுக்கு மரியாதை குடுக்க கத்துக்க.... உன் முகத்தைக் கூட பாக்காம கவுந்துகிட்டு கிடந்த சத்யன் நான் இல்லை.... இவன் புதுசு.... என்னைய விட்டு விலகனும்னு நெனைச்ச?.......... உன்னை நெருக்கி அள்ளி இந்த மலையடிவாரத்துலயே புதைச்சிட்டுப் போயிடுவேன்..... அப்புறம் இதையும் கவனமா கேட்டுக்க.... நான் எப்ப உன் முகத்தப் பார்த்தாலும் அதுல மஞ்சளும் குங்குமமும் இருக்கனும்... தினமும் தலையில பூ வச்சுக்கனும்.... இனி நான் இங்கதான் சாப்பிடுவேன் மூனு வேளையும் தயாரா சாப்பாடு இருக்கனும்.... அதே போல எனக்குத் தெரியாம இந்த வாசப்படி தாண்டி எங்கயாவது வேலைக்குப் போனேன்னு தெரிஞ்சுது.... அப்புறம் நடக்க கால் இல்லாம உடைச்சு நொண்டிச்சியா வீட்டுல உட்கார வச்சு சோறு போடுவேன்.... என்னடா இவன் சொல்றதை செய்ய மாட்டான்னு நெனைக்கிறயா? பூமாத்தா மகன் செய்ய மாட்டான் தான்..... ஆனா மான்சி புருஷன் கண்டிப்பா செய்வான்... ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை செய்தான் சத்யன்.....

" அடப்பாவி " என்பது போல் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மான்சி.... சத்யன் இவ்வளவு பேசுவான் என்ற விஷயமே இத்தனை வருடங்களில் இப்போதுதான் தெரிந்தது.... இவனுக்கு என்னாச்சு? என்று பார்த்த விழி பார்த்தபடி இருந்தாள்.....

அவள் பலகீனமாக இருந்ததை பயன்படுத்தி அப்படியே தோட்டத்துக்கு தள்ளிக்கொண்டு போய் பாத்ரூமில் விட்டு " முகத்தை நல்லா கழுவிட்டு வா.... இனி அழக்கூடாது.... அடுத்து நடக்கவேண்டியதை பாரு ... சும்மா அழுதுகிட்டு இருக்காதே " என்று எச்சரிக்கை செய்துவிட்டு தோட்டத்து வாசப்படியில் அமர்ந்து கொண்டான்....

மான்சி தொட்டியிலிருந்த நீரை அள்ளி முகத்தில் அடித்து கழுவினாள்.... நடந்தது அத்தனையும் கனவாயிருக்குமோ? என்ற நினைப்பை பொய்யாக்குவது போல் சத்யன் கட்டிய தாலி கண்முன் தொங்கியது.... தாலியில் மின்னிய தங்கம் சத்யனின் மனது கூட தங்கம் தான் என்று சொன்னாலும்... ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து சாகவேண்டும் என்ற தனது நினைப்பில் சத்யன் மண் அள்ளிப் போட்டதாகவே எண்ணினாள் ...

முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்தவள் தோட்டத்து வாசலில் அமர்ந்திருந்த சத்யனை கண்டதும் மீண்டும் வீம்பு வர ... தலையை சிலுப்பிக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.....

அவளின் சிலுப்பல் சத்யனுக்கு சிரிப்பயே வரவழைத்தது... எழுந்து வீட்டுக்குள் போனான்...

மான்சி முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி பொட்டு வைத்துக்கொள்ளாமல் ... முன்பு அமர்ந்த இடத்திலேயே போய் அமர்ந்து கொள்ள... சத்யன் அவளை முறைத்தபடி சாமி மாடத்தில் போய் தேடினான்... விளக்குக்கு வைக்கும் குங்குமம் இருந்தது... அதை எடுத்து வந்து மான்சியின் எதிரில் அமர்ந்து நெற்றியில் பொட்டு வைத்தான்.... 

மான்சி கோபமாக அவன் வைத்த பொட்டை துடைக்க முயல.... சத்யனின் கோபம் மீண்டும் எல்லையை கடந்தது... " என்னடி நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ அதை காதுலயே வாங்கலை? நான் என்ன கேனையன்னு நெனைச்சயா" என்றபடி மெல்லத்தான் கன்னத்தில் அறைந்தான் .... ஆனால் அதற்கே மான்சி " அய்யோ " என்று கன்னத்தைப் பிடித்துக் கொண்டு படுத்துவிட்டாள்....

சுருண்டு படுத்து அழுதவளை கண்டதும் சத்யனுக்கு தன்மீதே கோபம் வர .... அவளை அடித்த கையை சுவற்றில் அடித்துக்கொண்டு " ஏன்டி இப்புடி பண்ற? எனக்கு கோவத்தை கெளப்பாம சொன்னதை கேட்டு நட... இல்லேன்னா நரிகுறத்திய கூட்டி வந்து நெத்தில பச்சை குத்த சொல்லிடுவேன்.. ஆமா" என்று மெதுவாக கூறிவிட்டு எழுந்தான்

அப்போது,, மான்சி பாதியில் விட்டு விட்டு வந்த பொங்கலை பொங்கி சாமிக்கு படையல் போட்டு விட்டு எல்லாவற்றையும் எடுத்துகொண்டு காமாட்சிப் பாட்டி வீட்டுக்குள் வர... பாட்டி பின்னாலேயே ஏழுமலையும் வந்தான்.....

வந்தவன் நேரகா சத்யனிடம் வந்து அவனை கட்டிக்கொண்டு " மாமா இப்பதான் எங்கம்மா போன் பண்ணி மேட்டர சொல்லுச்சு... உடனே ஓனர்ட்ட லீவு சொல்லிட்டு வந்துட்டேன்..... மாமா நீ சாமி மாமா" என்று உணர்ச்சி வசப்பட்டு பேசி சத்யனை அணைத்துக்கொண்டான்....

சத்யன் புன்னகையுடன் அவனை விலக்கிவிட்டு " ம்ஹீம் சாமியும் இல்ல ஒன்னுமில்ல..... இதை எப்பவோ நான் செய்திருக்கனும்... சரியான சந்தர்ப்பம் இல்லாம போச்சு... எல்லாத்துக்கும் நேரங்காலம் ஒத்து வரனுமே.... இத்தனை நாள் இவளை தனியா விட்டுட்டு நான் தவிச்ச தவிப்புக்கெல்லாம் இன்னைக்கு தான் விடிவுகாலம் வந்திருக்கு... ஆனா இவ அடங்க மாட்டேங்குறா மாப்ள" என்று முறைப்புடன் சொல்ல ...

ஏழுமலையின் கவனம் மான்சியிடம் திரும்பியது... " அக்கா " என்றபடி அவளருகில் சென்று அமர்ந்தவன் ... " என்னக்கா இது? உன்னைய இந்த மாதிரி பார்க்கமாட்டமான்னு எத்தனை நாள் ஏங்கிருக்கேன்... இப்பதான் நல்லது நடந்திருக்கு.. சும்மா கண்டதையும் பேசி மாமாவை கோவப்படுத்தாத... எழுந்து போய் சமையல் செய்க்கா" என்று பெரியவனாய் மாறி புத்தி சொன்னான்...

காமாட்சிப் பாட்டியும் மான்சியின் அருகில் அமர்ந்து அவள் பங்கிற்கு புத்தி சொல்ல...மான்சிக்கு புகைந்து கொண்டு வந்தது ... எல்லாரும் அவன் பக்கமே பேசுறாங்களே.... என்னைய யாருமே புரிஞ்சுக்கலையே' என்று ஆதங்கமாக இருந்தது ....

இருந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே படுத்துகிடந்தாள் மான்சி.... ஆனால் சத்யன் வைத்த குங்குமம் கலையாமல் மிக ஜாக்கிரதையாக படுத்திருந்தாள் ....

" இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருக்கான்னு பாக்கலாம்.... விடுங்க" என்று சத்யன் சொன்னதும் காமாட்சிப் பாட்டி நகர்ந்து அமர... ஏழுமலை எழுந்து மீண்டும் சத்யனின் கையைப் பிடித்துக்கொண்டான்...

" ஆயா இனிமே இவளை எந்த வேலைக்கும் கூட்டிட்டுப் போகாத...... என் கழனில வேலை இருக்கும்போது வேணும்னா என்கூட வந்து செய்யட்டும்... மிச்ச நாள்ல சோத்த ஆக்கி வச்சுட்டு வீட்டுலயே படுத்து கிடக்கட்டும்" என்று சத்யன் பாட்டியிடம் சொல்ல....

" நீ சொல்றது கேட்க நல்லாதான் இருக்கு பேரான்டி.... ஆனா உங்காத்தா இம்பூட்டு கத்து கத்திட்டு போயிருக்காளே...... கழனில உங்க ரெண்டு பேரையும் கால் வைக்க விடுவாளா?" என்று பாட்டி கேட்க....

ரோசமாக நிமிர்ந்த சத்யன் " ஏன் விடமாட்டாங்க? வீடுதான் எங்கப்பன் சம்பாதிச்சது.... கழனி எங்கப்பா சாகும் போது அடமானத்துல கிடந்துச்சு.... நான் நாலு ஊரு ஓடி உழைச்சு கழனிய மீட்டேன்... என்னை கழனிக்கு வரக்கூடாதுனு சொல்ற உரிமை எங்காத்தாளுக்கே கிடையாது" என்று வீரவேசமாக பேச .....

" அது சரிதான்" என்று பாட்டி ஒப்புகொண்டாள்....


சத்யன் தனது சட்டை பாக்கெட்டிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து ஏழுமலையிடம் கொடுத்து " மாப்ள நீ போய் காய்கறிலாம் வாங்கிட்டு வா... இன்னைக்கு சோறு நாம ஆக்கி இவளுக்குப் போடுவோம்" என்று சொன்னதும் . " அதானே ? எங்களுக்கா சமைக்கத் தெரியாது? நீ காசை குடு மாம்ஸ் நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்று பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே ஓடினான் ஏழுமலை....

காமாட்சிப் பாட்டி இன்னும் ரெண்டு அறிவுரைகளை மான்சிக்கு வழங்கிவிட்டு " ஏதோ அந்த செல்லிம்மா முன்னாடி கண்ணாலம் நடந்து போச்சு.... எப்புடியோ ரெண்டு பேரும் ஒத்துமையா வாழ்ந்தா சரி" என்று பொதுப்படையாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்...

சத்யன் தோட்டத்திலிருந்த விறகுகளை அள்ளி வந்து அடுப்பருகில் வைத்துவிட்டு மான்சியிடம் வந்து " அரிசி எங்க வச்சிருக்க?" என்று கேட்க....

மான்சியின் கோபம் அடங்காமல்... " நீ இங்கருந்து போக மாட்டியா? அரிசி வேணுமாம் அரிசி?" என்று புகைந்தாள்...

சத்யன் ஏதோ சொல்வதற்காக மான்சியின் அருகில் அமர்ந்த போது...
சண்முகம் உள்ளே நுழைந்தான்.... சத்யன் மான்சியின் அருகிலிருந்து எழுந்திருக்காமல் முகமெல்லாம் புன்னகையாக சண்முகத்தை தலையசைத்து வரவேற்க்க.... மான்சி சண்முகத்தைக் கண்டு சங்கடத்துடன் எழுந்து அமர்ந்தாள்....

" ஏய் இந்தாப்பா உன் துணியெல்லாம்...." என்று சண்முகம் ஒரு லெதர் பையை வைக்க..... " அம்மா திட்டுச்சா மாப்ள?" என்று சத்யன் கவலையாக கேட்டான்...

" திட்னாங்களா? நீவேற... நான் போறதுக்கு முன்னாடியே உன் துணியெல்லாம் தெருவுல வந்து கிடந்துச்சு... உன் சித்தப்பா வீட்டுல பை வாங்கி எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு வந்தேன்... அனேகமா நான் எல்லாத்துக்கும் காரணம்னு உங்கம்மாக்கு தெரிஞ்சிருக்கும் மச்சான் .... " என்றான் சண்முகம்...

மான்சி கலங்கிய கண்களுடன் சண்முகத்தை ஏறிட்டு " ஏண்ணே இந்தாளுக்கு தான் புத்தி கெட்டு போச்சுன்னா? நீங்களுமா இப்புடி செய்வீங்க? ஒரு பொம்பளை தாலியறுத்துட்டு தனியா வாழக்கூடாதா? எப்பவுமே புருஷன் கூடவே தான் இருக்கனுமா? கௌரவமா வாழ நினைச்சேன்... இப்புடி சேத்தை வாறி அடிச்சிட்டீங்களே அண்ணே" என்று முகத்தை மூடிகொண்டு அழுதாள்...
அந்த வீட்டி கிடந்த ஒரே பிளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டு அதில் அமர்ந்த சண்முகம் " இதோ பாரும்மா தங்கச்சி... நீ சொல்றது நியாயமான பேச்சா கூட இருக்கட்டும் ... ஆனா உன் நினைப்புலயே செத்துகிட்டு இருக்குற என் மச்சான் தான் எனக்கு முக்கியம்.... உன் வாழ்க்கையையும் யோசிச்சு தான்மா இப்படி ஒரு முடிவு எடுத்தேன்.... ஆண் துணையில்லாம பொண்ணால வாழ முடியாதுனு நான் சொல்ல வரலை... ஆனா அப்படி வாழ்ந்து என்ன செய்யப்போற? உனக்கு இந்த ஊர்ல சிலையா வைக்கப் போறாங்க? தனியா இருக்குற உன்கூட அண்ணன் தம்பி முறை உள்ளவன் வந்து பேசினாக் கூட இந்த ஊரும் உலகமும் தப்பாதான் பேசும்... அந்த ஊரு உலகத்துக்குப் பயந்து ஏன் வாழனும்.... நம்ம மனசுக்குப் பிடிச்சவனோட ஒழுக்கத்தோட வாழ்ந்துட்டு ஊர்ல நல்லவனு பேர் வாங்கிட்டு போகவேண்டியதுதான?...... இந்த கல்யாணத்தை உன்னோட முதல் புருஷனுக்கு செய்ற துரோகமா நீ நினைச்சா?.............. இது துரோகம் கிடையாது மான்சி .... அவன் பொண்டாட்டினு சொல்லிகிட்டு வாழும்போது ..... அவன் பேரு கெடுற மாதிரி ஊர் உன்னை அசிங்கப்படுத்துதே அது தான் நீ அவருக்கு செய்ற துரோகம்... நீ யோக்கியமானவளாவே இருந்தாலும் இந்த ஊர் உன்னை வாழவிடாது.... இன்னாருடைய பொண்டாட்டி இவன்கூட இந்த இடத்துல பேசிகிட்டு இருந்தான்னு வெட்டி கதை பேசியே உன் புருஷன் பேரையும் உன் பேரையும் நாரடிப்பாங்க.... அதைவிட இப்படி ஒருத்தனை கல்யாணம் செய்து கௌரவமா வாழ்றது தான் நீ உன் முதல் புருஷனோட பெயருக்கு தர்ற மரியாதை கௌரவம் எல்லாம் .......நான் சொல்றது உனக்கு வெறுப்பா இருக்கலாம்... ஆனா நல்லா யோசிச்சுப் பாரு புரியும்" என்று நீண்ட விளக்கமாக சொல்லி முடித்தான்...

மான்சி தலைகுனிந்திருக்க ... சத்யன் தனது தங்கையின் கணவனை பெருமையுடன் பார்த்தான்..... எவ்வளவு மகத்தான சிந்தனை... கன்னியின் வாழ்வில் ஒரு ஆணின் அத்தியாயம் எழுதப்படுவதை விட .... ஒரு விதவையின் வாழ்வில் ஆணின் தேவை எவ்வளவு முக்கியம் என்ற தெளிவான சிந்தனை..... சத்யன் கண்களுக்கு சண்முகம் மிகவும் உயர்ந்து தெரிந்தான்...... 

" சரி எதையாவது செய்து வயித்துக்கு சாப்பிடுங்க..... சண்டை போடுறதுனு முடிவு பண்ணிட்டா நல்லா சாப்ட்டு சண்டை போடுங்க.... பட்டினியோட சண்டை வேணாம்......" என்று கேலியாக சொல்லிவிட்டு எழுந்தான் சண்முகம்.... மான்சியை மட்டும் பார்த்து " நீ வாழ்க்கையில ரொம்ப அடிப்பட்ட பொண்ணு.... எப்படி வாழனும்னு நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை.... உங்களுக்குள்ள எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அது வெளியத் தெரியகூடாது.... இப்ப இல்லேன்னாலும் இன்னொருநாள் நிதானமா மனசுவிட்டு பேசுங்க.... ஊருக்கு கௌரவமா ஒத்துமையா வாழப்பாருங்க..... இன்னைக்கு உங்க ரெண்டுபேரையும் ஏளனமா பார்த்தவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழனும்னு முயற்சி பண்ணுங்க.... நான் கிளம்புறேன்" என்று வாசலை நெருங்க... சத்யனும் அவன் பின்னாலேயே வெளியே வந்தான்


No comments:

Post a Comment