Saturday, May 13, 2017

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 21

வேலிப் படல் வரை வழியணுப்ப வந்தவன் " அன்பு ஏதாவது தவறா நெனைக்கப் பேகுது மாப்ள... என் நிலைமையை சொல்லி புரிய வைங்க மாப்ள" என்று சத்யன் உருக்கமாக கூற ...

" அட நீவேற இன்னைக்குப் பூராவும் கெஞ்சுனாக் கூட வெட்கப்படுடுக்கிட்டு தரவே மாட்டா.... இப்போ போன்ல உன் மேட்டரை சொன்னதும் சந்தோசம் தாங்காம போன்லயே எக்கச்சக்கமா குடுத்தா.... அதான் நேர்ல போய் மிச்சத்தையும் வாங்கிடலாம்னு சீக்கிரமாவே கிளம்பிட்டேன்" என்று சண்முகம் உற்சாகத்துடன் கூற....

சந்தோஷத்துடன் சிரித்த சத்யன் " கல்யாணம் ஆகி பொண்ணுங்க தான் புகுந்த வீடு வருவாங்க... இங்க தலைகீழா நான்தான் பொண்ணு வீட்டுக்கு வந்திருக்கேன்... ஆனா இதுகூட நல்லாதான இருக்கு மாப்ள?" என்று சத்யன் அசடு வழிய கேட்க....

" அய்ய என்னா மச்சான் இப்புடி வழியுற? கருமம் உன் மூஞ்சிக்கு நல்லாவேயில்லை... பொண்டாட்டிக்கு கூஜா தூக்கப் போறேன்ங்கறத இப்புடி வெட்கமில்லாம சொல்ற மொத ஆளு நீதான்யா" என்று தனது தலையில் அடித்துக் கொண்ட சண்முகம் " போ போ .. மூஞ்சிய நல்லா துடைச்சிட்டுப் போய் அம்மனிய எழுப்பி சோறு போட்டு நீயும் சாப்பிடு... நான் என் வீட்டுக்கு கிளம்புறேன் " என்று கூறிவிட்டு மறுபடியும் சத்யனை நெருங்கி " மச்சான் ஆக்கப் பொறுத்தவன் ஆறப்பொறுக்கனும் .... அந்த பொண்ணு மனசு மாறுற வரைக்கும் காத்திரு .... அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துடாத" என்று சத்யனிடம் சொல்லிவிட்டு சண்முகம் புறப்பட்டான்....

சத்யன் வீட்டுக்குள் வந்தான்.... மான்சி முழங்கால்களை கட்டிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்க..... இவள் என் மனைவி என்ற நினைப்பே போதும் என்று நினைத்தான்..... அவள் நிழலை தொடும் தூரத்தில் நான் என்ற நிலையே சத்யனை பறக்க விட்டது.....




" எனக்காவே நீ....

" உனக்காகவே நான்....

" என்ற நிலை கடந்து.....

" நமக்காகவே நாம்.....

" என வாழ்ந்துவிடுவோம் வா,!!!!

ஏழுமலை காய்கறிகள் வாங்கி வர .... இருவரும் அரட்டையும் சிரிப்புமாக சமையல் செய்தனர்.... மான்சி உள்ளுக்கு புகைந்தபடி அமர்ந்திருந்தாள்.......

இடையே சின்னு விழித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க சத்யன்தான் தொட்டிலில் இருந்து குழந்தையை தூக்கி மான்சியிடம் கொடுத்து " பசில அழுவுறான் போலருக்கு...மொதல்ல குழந்தைக்கு பசியாத்து மான்சி" என்று கூற ....

மான்சி குழந்தையை கூட வாங்காமல் முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்... சத்யன் அவள் முகத்தருகே குனிந்து தாழ்ந்த குரலில்... " இப்ப குழந்தைக்கு பால் குடுக்கப் போறயா? இல்ல நானே குடுக்க வைக்கவா" என்றபடி முந்தானையின் அருகே கையை நகர்த்தினான்....

அவனை கண்டு நெருப்பாய் விழித்து " ச்சீ போய்த் தொலை" என்று கடிந்தவள் குழந்தையை வாங்கி மடியில் கிடத்தி சுவர் பக்கமாக திரும்பி கொண்டாள் .... சத்யன் புன்னகையுடன் விலகிப் போனான்.....

உணவு தயாரானதும் " நான் மொதல்ல போட்டு துன்னுட்டு போயிர்றேன்.... அப்புறம் நீங்க ரெண்டு பேரும் தின்னா தின்னுங்க... இல்ல ஒருத்தர் மூஞ்சிய ஒர்த்தர் பார்த்துகிட்டு உட்கார்ந்திருங்க... நான் சாப்புடுறேன் " என்ற ஏழுமலை முதலிஸ் தட்டை எடுத்து வைத்து சோற்றைப் போட்டு குழம்பை ஊற்றி பிசைந்து உருட்டி அவசரமாக விழுங்கினான்...

" யோவ் மாமா கொழம்பு சூப்பர்யா....." என்றபுறங்கையை நக்கியபடி கூறினான் ... சத்யன் புன்னகை மாறா முகத்துடன் அமர்ந்திருந்தான்...

சாப்பிட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு சத்யனைப் பார்த்து ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்பதுபோல் கண்ணசைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் ....

மான்சி குழந்தைக்கு பால் கொடுத்து முடியும் வரை காத்திருந்த சத்யன்...... பிறகு குழந்தையை தூக்குவதற்காக நெருங்க... மான்சி குழந்தையுடன் விருட்டென்று எழுந்து " நீ ஆக்குனத நீ யே தின்னு... எனக்கு வேணாம்" என்று முறைப்புடன் கூறிவிட்டு கதவை திறந்து வெளியே போக முயன்றாள்...

ஆனால் சத்யன் சட்டென்று சுதாரித்து " ஏய் எங்கடிப் போற" என்று மான்சியின் கையை பிடித்து இழுக்க ... இழுத்த வேகத்தில் பொத்தென்று சத்யனின் நெஞ்சில் வந்து விழுந்தாள் மான்சி....

குழந்தையோடு அவளையும் வளைத்தவன்... முகத்சருகே குனிந்து " ஒழுங்கா வந்து சாப்பிடு .... இல்லை கையையும் காலையும் கட்டிட்டு நானே ஊட்டுவேன்.... எப்புடி வசதி?" என்றதும்....

மான்சி விழிகள் குளமாக.... சத்யனை நோக்கி " ஏன் இப்புடிலாம் பண்ற?.... எனக்கு தாலி வேணும்... வாழ்க்கை குடுன்னு உன்னை கேட்டேனா? ஊர் முன்னாடி என்னைய அசிங்கப்படுத்திட்டயே சத்தி" என்று குமுறியபடி மான்சி கூற.....

அவளின் சத்தி என்ற அழைப்பு சத்யனை உருக வைத்தது.... ஆனாலும் அவளுக்கு விட்டு கொடுக்க மனமின்றி " உன் கேள்விக்கு என் மச்சான் சொன்ன பதிலையே தான் நானும் சொல்லனும் ... ஆனா சண்முகம் சொல்லாதது ஒன்னு இருக்கு மான்சி " என்றவன் தன் கையில் கிடந்தவளை நிமிர்த்தி நேராக நிற்க்க வைத்து " உன்கூட நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் மான்சி.... என்னிக்கு தைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டுல வயித்துல சின்னுவை வச்சிகிட்டு புடவையை தூக்கிப் பிடிச்சிகிட்டு நடந்து போனையோ.... அந்த நிமிஷத்துலருந்து இனேனொருத்தன் பொண்டாட்ங்கறதையும் மறந்து உன்கூட வாழ்ந்துகிட்டு இருக்கேன் மான்சி" என்று சத்யன் உணர்ச்சிவசப்பட்டு பேச....

மான்சி நெருப்பை மிதித்தவள் போல் அதிர்ந்து போய் அவனை பார்த்து " நான் வந்து உன் காலைப் பிடிச்சு கெஞ்சினப்ப ஆதரிக்காதவன்... இன்னொருத்தனுக்குப் பொண்டாட்டியானதும் கற்பனையில வாழ்ந்தேன்னு சொல்றயே இது உனக்கே கேவலமா தெரியலையா?" என்றாள் ...

"அன்னைக்கு நீ வந்து கூப்பிட்டப்ப எனக்கு கடமை இருந்துச்சு மான்சி... ரெண்டு தங்கச்சிகளுக்கு அண்ணனா இருந்து நெஞ்சை கல்லாக்கிக் கிட்டு உன்னை வேணாம்னு சொன்னேன்... ஆனா கற்பனைல காதலிச்சு கனவுல வாழ்றதுக்கு என்னை எந்த கடமையும் தடுக்கலை மான்சி.... மறுபடியும் உன்னைப் பார்க்குற வரைக்கும் மனசை திடப் படுத்திகிட்டு தான் இருந்தேன்... ஆனா அன்பு கல்யாணத்துக்கு பத்திரிக்கை குடுக்க வந்து உன்னை நேரா பார்த்தப் பிறகு என் மனசு என்கிட்ட இல்லை மான்சி.... அன்னைலருந்து நீ என் நிழல் மாதிரி கூடவேத்தான் இருக்குற " என்றவன் முகம் சட்டெனெ பளிச்சிட " உனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குனு தெரிஞ்சம் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா? எனக்கே மகன் பிறந்துட்டான்னு ரொம்ப சந்தோசப்பட்டேன் மான்சி" என்று சத்யன் சொல்லும் போதே ....

அவனை ஏளனமாகப் பார்த்த மான்சி..... " இன்நொருத்தன் பொண்டாட்டிய... இன்னொருத்தன் புள்ளைய உனக்கு சொந்தம்னு நெனைச்சிருக்கியே? நீ எல்லாம் ஒரு மனுசனா? இது கேவலம்னு உனக்குத் தெரியலையா?" என்று ரத்தம் சூடனதன் பாதிப்பு முகத்தில் தெரிய ஆத்திரமாய் கேட்க.....

சத்யன் அலட்சியமாய் பதில் சொன்னான்... " இதிலென்ன கேவலம் ? நான் வேணாம்னு சொன்னதும் நீ கல்யாணம் பண்ணிகிட்டு புருஷனுக்கு உண்மையா இருக்கனும்னு என்னை மறந்துட்ட.... உன்னை நெஞ்சுல வச்சுகிட்டு கட்டாயத்தால் உதட்டளவுல வேணாம்னு சொன்ன நான் என் காதலுக்கு உண்மையா இருந்தேன்.... நீ தாலிக்கட்டனவனுக்கு மரியாதை குடுத்த... நான் என் மனசு பூராவும் நிறைஞ்சிருந்த காதலிக்கும் காதலுக்கும் மரியாதை குடுத்தேன்.... புருஷனுக்கு உண்மையா இருந்த நீ ரொம்ப உயர்ந்தவள்னா ?.... என் காதலுக்கும் காதலிக்கும் உண்மையா இருக்குற நானும் உன்னை விட பலமடங்கு உயர்ந்தவன்.... நான் ஒன்னும் கோபாலை விட்டுட்டு என்கூட வந்துடுனு உன்னை கூப்பிடலையே? அப்படிக் கூப்பிட்டிருந்தா அது கேவலம்.... நான் செய்தது உண்மையான காதல்.... " சத்யன் கர்வமாக உயர்ந்து நிமிர்ந்து நின்றான்

கையிலிருந்த குழந்தையை கீழே விட்டுவிட்டு தனது காதுகளைப் பொத்திக்கொண்டாள் மான்சி..... " வேணாம் எதுவும் சொல்லாத...... " என்று அலறியவளை நெருங்கி நின்று " ஏன்டி உண்மையை சொன்னா வழிக்குதா? ..... இதுதான்டி நெசம்..... நீ போடுறது வேஷம்" என்று சத்யன் ஏளனமாய் சொல்ல....

" இல்ல இல்ல இல்ல நான் வேஷம் போடலை... " என்று கத்தியபடி தரையில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு கத்தினாள் மான்சி ...

சத்யன் அவளெதிரே மண்டியிட்டு அமர்ந்தான் " இதோ இப்புடி கத்துற பாரு ? இதுதான் வேஷம்..... முன்னாடி காரணமே இல்லாம என்மேல கோபப்பட்டு பேசின பாரு? அதுவும் வேஷம்.... உனக்கு பயம்டி... என்னை நேர்ல பாக்கப் பாக்க எங்க விழுந்துடுவமோனு பயம்டி உனக்கு" சத்யனின் குரலில் ஆத்திரம்.... இத்தனை நாட்களாக அவமதிக்கப்பட்டதன் ஆத்திரம்....

கண்ணீருடன் நிமிர்ந்த மான்சி " இல்ல சத்தி நான் நடிக்கலை .... நடிக்கலை" என்று சத்யனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு கதறியதும் சத்யனுக்கும் கண்ணீர் வந்தது ...

தன்னை நோக்கி கும்பிட்ட அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.... " வேணாம் மான்சி அழாத..... நான் உன்னை அழவைக்கனும்னு இதையெல்லாம் சொல்லலை.... சத்தியமா நான் உன்னைய ரொம்ப நேசிக்குறேன்டி.... இதோபாரு நீ இப்புடி கதறி அழற அளவுக்கு இது ஒன்னும் கொடும் பாவம் இல்லை மான்சி.... வேணும்னா இப்படி வச்சுக்கோயேன்? இதோ நீ கட்டின வீட்டுக்குள்ள ஆடு மாடு புகுந்துட கூடாதுன்னு முள்ளால வேலி போட்டு வச்சுருக்கியே? அதுபோல உன் மானத்துக்கு நான் வேலின்னு நெனைச்சுக்க மான்சி.... உன்னை எந்த அவமானமும் தீண்டாம பாதுக்காக்குற வேலியா என்னை நெனைச்சுக்க மான்சி" என்று சத்யன் கண்ணில் நீர் வழிய கூற....

மான்சி அவன் முகத்தை அன்னாந்து பார்த்து " சத்தி?" என்று குரல் கமற கேட்க....

ஆமா மான்சி.... நான் வேலி மட்டும் தான்... இந்த துளசி மாடத்தை காக்கும் வேலி..... எப்பவுமே வேலியா வெளிய நான்.... துளசியா நீ உள்ளேதான் ...... நான் வெறிய தனிச்சுக்க உன் கழுத்துல தாலி கட்டலை..... என் நெஞ்சு முழுக்க காதலை சுமக்க முடியலை.... நாளுக்குநாள் வளர்ந்து என் கழுத்தைப் பிடிக்குது மான்சி.... அதை உன் காலடியில் வைக்க அனுமதி தான் இந்த தாலி.... எனக்கும் ஆசையிருக்கு தான்.... எல்லாரையும் போல வாழனும்னு .... ஆனா நீ அனுமதிக்கும் வரை என் ஆசை நிராசையாவே இருக்கட்டும்.... என்னை நினைச்சு நீ எப்பவுமே பயப்பட வேணாம்...... இப்ப வா மான்சி சாப்பிடலாம் பசிக்குது " என்று அவளை தீண்டாமல் அழைத்தான்....

மான்சியின் இதயம் முழுவதும் சத்யனின் வார்த்தைகள் நிரம்பி வழிந்தது.... இது இதுதான் சத்தி...... அடுத்தவங்க உணர்வுகளை மதிக்கும் இவன் தான் சத்தி.... அன்று நிர்கதியாய் தன்னை துரத்தியவன் பூமாத்தாவுக்கு மட்டும் மகன்... கோழை மகன்...
இருந்தாலும் அனுமதியின்றி தன் கழுத்தில் கிடந்த தாலி உறுத்தத்தான் செய்தது ... மான்சி மவுனமாக எழுந்தாள்....

சமையல் தடுப்புக்கு பின்னால் சென்று சமைத்த உணவை எடுத்து வந்து சத்யனுக்கு தட்டு வைத்து விட்டு சாதத்தை அள்ளி வைக்க.... சத்யன் அவளுக்கும் ஒரு தட்டை வைத்து சாதம் வைத்தான்.... அதன்பின் இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை.... அருமையாக இருந்தது சத்யன் தயாரித்த உணவு .... 

மான்சி சாப்பிட அமர்வாள் என்று சத்யன் எதிர்பார்க்கவில்லை.... சந்தோஷமாக உணவு இறங்கியது..... மான்சியை மறக்கவும் முடியாமல் ..... அவளை நெருங்கவும் முடியாமல் நேற்று தவித்த தவிப்பெல்லாம் இன்று பசியாக மாறியிருந்தது.... வேகவேகமாக சாப்பிட்டான்.....

அதன்பின் இருவருக்குள்ளும் பெரும் அமைதி...... மான்சி தனது பழைய இடத்தில் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்துகொள்ள .... " நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வர்றேன் மான்சி" என்று சொல்லிவிட்டு சத்யன் வெளியே கிளம்பினான்.....

பெயர் சொல்லி கூட அழைக்க தயங்கும் சத்யன் இன்று நிமிடத்திற்கு ஒரு முறை மான்சி மான்சி என்று அழைத்தது.... ஆச்சர்யமாக இருந்தது.... எப்படி மாறிட்டான்... எதற்காக இந்த மாற்றம்?..... மான்சி அப்படியே சரிந்து படுத்து உறங்கிப் போனாள்.....
ஏழுமலையை அழைத்துக்கொண்டு டவுனுக்கு வந்த சத்யன் அவனது வங்கி கணக்கு இருந்த கூட்டுரவு வங்கிக்கு சென்று தமிழரசியின் திருமண செலவுகள் போக மிச்சமாக விட்டுவைத்திருந்த பணத்தில் பத்தாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு வந்து முதலில் வாங்கியது மான்சிக்கு கண்ணாடி வளையல்கள் தான்.... பிறகு குங்குமம் மஞ்சள்... என்று வாங்கியவன்.... நிறைய சலங்கைகள் வைத்த வெள்ளி கொலுசு ஒன்றையும் வாங்கிக்கொண்டான்.....

ஏழுமலைக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை..... " மாமா உன்னைய என்னமோனு நெனைச்சேன்.... ஆனா உனக்குள்ள இப்புடி ஒரு ஆள் இருக்கறதை இப்பத்தான் பார்க்குறேன்..... நீ அசத்து மாமா.... நான் எப்பவுமே உன் கட்சிதான்" என்றான்....

எல்லாம் வாங்கிக்கொண்டு சத்யன் வீடு வந்து சேரும்போது மணி இரவு ஏழாகிவிட்டிருந்தது.... மான்சி வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்திருந்தாள்..... சத்யனின் பார்வை நேராக அவள் நெற்றிக்குத்தான் சென்றது.... குங்குமம் கலையவில்லை....

வரும்போதே ஏழுமலை அவன் வீட்டுக்குப் போய்விட சத்யன் மட்டும்தான் வந்தான்..... கொண்டு வந்த பையை ஓரமாக வைத்துவிட்டு விளையாடிக்கொண்டிருந்த சின்னுவை தூக்கி அவனுக்காக வாங்கி வந்த புது உடையை போட்டான்.... சின்னு அழகில் மான்சியைப் போலவே.... சத்யன் வாங்கி வந்திருந்த உடை குழந்தைக்கு வெகு பொருத்தமாக இருந்தது.....

சத்யன் முத்தமிட முத்தமிட சிரித்த மகனை ஓரக்கண்ணால் பார்த்தபடி துவைத்த துணிகளை மடித்து வைத்தாள் ...... அவளுக்குள்ளும் ஆக்ரோஷம் இருந்ததுதான்... ஆனால் சத்யனின் வார்த்தைகளும் மென்மையான அனுகுமுறையும் அவளை கொஞ்சம் அடக்கி வைத்திருந்தது....

சிரிக்கும் ரோஜாவை கீழே விட மனமின்றி கொஞ்சிய சத்யன்.... " என் சின்னராசுக்கு இன்னும் பேரு வைக்கவே இல்லையே? ராசுக்கு நான் பெயர் வைக்கவா?" என்றவன் நிமிட நேரம் மான்சியைப் பார்த்துவிட்டு " நீ பொறந்ததுமே நான் உனக்கு பேரு வச்சிட்டேன்டா தங்கம்.... அந்த பெயரை சொல்ல இதுபோல ஒரு சந்தர்பம்தான் வரலை... ம்ம் இன்னைக்கு நம்ம எல்லாருக்கும் ரொம்ப முக்கியமான நாள் .... அதனால இன்னைக்கே உனக்கும் பேரு வச்சிடலாம்" என்ற சத்யன் மீண்டும் மான்சியைப் பார்க்க....

அவளும் அவனைதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.... ' என் மகன் பொறந்ததுமே இவன் பெயர் வச்சிட்டானா? என்ற திகைப்பு மாறி ' என்ன பெயர் வச்சான்னு தெரியலையே?' என்ற ஆர்வம் வந்து தொற்றிக்கொண்டது....

'என்ன மான்சி அந்த பெயரையே வச்சிடலாமா?" என்று சத்யன் சந்தோஷத்துடன் கேட்க மான்சி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.....

சத்யன் சிரித்தபடி வாங்கி வந்த இனிப்பை கொஞ்சம் எடித்து குழந்தையின் வாயில் வைத்துவிட்டு .... காதருகில் சென்று " மெய்யரசு..... மெய்யரசு...... மெய்யரசு" என்று மூன்றுமுறை உச்சரிக்க.... மான்சி அவனை வியப்புடன் பார்த்தாள்... மெய்யரசு,, ம்ம் நல்ல பெயர்தான்..... 

" என்ன மான்சி பெயர் நல்லாருக்கா? ..... இவனை என்னைக்கு உன்வயித்துக்குள்ள இருக்கும் போது பார்த்தேனோ? அன்னிலருந்து தான் என் போலித் தனத்தை உதறிட்டு முழுக்க முழுக்க உன்னை விரும்ப ஆரம்பிச்சேன்.... ,, என் காதலை மெய்யாக்கிய அரசு இவன் .... அதான் மெய்யரசு..." சத்யன் பெருமிதமாக சொல்லிவிட்டு ..... " இனிமே நீ கூட இவனை மெய்யரசுன்னே கூப்பிடு மான்சி" என்று கெஞ்சுதலாய் கோரிக்கை வைத்தான்...

மான்சி எதுவும் பேசாமல் எழுந்து சென்று இரவு உணவை எடுத்து வைத்துவிட்டு சத்யனுக்காக காத்திருக்க .... குழந்தையுடன் வந்து அமர்ந்தான் சத்யன்...

ஒரே வீட்டுக்குள் சத்யன் ஒருவன் மட்டுமே பேசுவது கொஞ்சம் எரிச்சலாக வந்தது .... " இதோப்பாரு மான்சி..... நான்தான் உன் சம்மதம் இல்லாம விரலைக் கூட தீண்ட மாட்டேன்னு சொல்றேன்ல? அப்புறமா ஏன் விரோதி மாதிரி முறைச்சுகிட்டு இருக்க? சும்மா நண்பர்கள் மாதிரியாவது ஏதாவது பேசிகிட்டு இருக்கலாமே மான்சி?" சத்யன் உருக்கமாக வேண்டினான்....

இந்த ஒருதலைப்பட்சமான மவுனம் நேரத்தைகூட வேகமாக செல்லவிடாமல் நத்தை போல் ஊர்ந்து செல்ல வைத்தது.... ஒரு வீட்டில் இருவர் மட்டுமே இருந்தாலும் கூட பேசிக்கொண்டே இருந்தால் நேரம் போவது கூட தெரியாது....

சத்யன் இவ்வளவு சொல்லியும் மான்சி பேசா மடந்தையாகத்தான் இருந்தாள்.... சரி ஒரே நாளில் மாற்றங்கள் வராது விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று எண்ணிய சத்யன் தன்னிடம் இருந்த குழந்தையை மான்சியின் மடியில் கிடத்திவிட்டு " எந்த குழப்பமும் இல்லாம தூங்கு மான்சி... நான் வெளிய திண்ணையிலப் படுத்துக்கிறேன்" என்று கூறிவிட்டு தனது உடைகள் இருந்த பேக்கிலிருந்து ஒரு கைலியை எடுத்துக்கொண்டு வெளியேப் போக திரும்பியவன் வாங்கி வந்த பொருட்கள் அடங்கிய பை இன்னும் அதே இடத்தில் இருப்பதை கண்டு அதை எடுத்துக்கொண்டு மீண்டும் மான்சியின் எதிரில் அமர்ந்தான்....

" உன்னை தொட மாட்டேன்னு சொன்னேன் தான்.... ஆனா இப்போ கொஞ்சநேரம் தொட அனுமதி வேணும்" என்றவன் அவள் அனுமதிக்கும் முன்னரே கையைப் பற்றி தான் வாங்கி வந்த கண்ணாடி வளையல்களை போட்டான்.... மான்சி கையை இழுத்துக் கொள்ள முயன்றும் அவனது முரட்டுப் பிடியில் முடியாமல் போனது....

அவள் முகத்தைத் திருப்பி கூந்தலில் பூ வைத்தான்... கால்களைப் பற்றி இழுத்தபோது மான்சியின் எதிர்ப்பு கடுமையாக இருக்க.... அவள் கால்களைப் பற்றிக்கொண்டு கண்களால் கெஞ்சினான்.... மான்சியின் எதிர்ப்பு தளர்ந்து போனது..... 

கொலுசுகளை எடுத்து கால்களில் அணிவித்துவிட்டு குனிந்து அவளின் பாதங்களில் தன் முகத்தைப் பதிக்க.... மான்சி கால்களை வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள்..... சத்யன் சிரிப்புடன் எழுந்து கொண்டான்....

ஆனால் மான்சி முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி " இதெல்லாம் எனக்குப் பிடிக்கலையே.... எனக்கு வேண்டாம் " என்றா கண்ணீருடன் இறைஞ்ச.....

சத்யனுக்கு அவள் மனம் புரிந்தது.... ஆனால் அதற்காக அவன் கனவுகளை பொசுக்கவும் முடியாது " பிடிக்கும் மான்சி... இன்னைக்கு இல்லேன்னாலும் என்னைக்காவது ஒருநாள் நிச்சயம் பிடிக்கும்.... ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்க மான்சி? இதோ இந்த பூ பொட்டு மஞ்சள் வளையல் கொலுசு இதெல்லாம் சாதரணமான விஷயமா இருக்கலாம்... ஆனா அதெல்லாம் தான் என் உசுர்.... நீ அதை விடனும்னு நெனைக்கிற நேரம் என் உசுரு போயிடுச்சுனு நெனைச்சுக்க" என்றுவிட்டு அவள் பதிலை எதிர் பார்க்காமல் வெளியே சென்று கதவை மூடினான்....

மூடிய கதவையே வெறித்தாள் மான்சி .... என்ன வார்த்தை சொல்லிட்டான்? இதெல்லாம் நான் போடலைனா அவன் உசுரு போயிடுமாம்ல? கையில் கிடந்த வளையல்களை மான்சியின் விரல்கள் வருடியது.... கண்ணாடி வளையல் மோதி குலுங்கும் சப்தம்.... மான்சியின் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது....

அன்றைய இரவு சதய்னுக்கு கனவுகளுடனும்.... மான்சிக்கு கண்ணீருடனும் கழிந்தது....

மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்த மான்சி தெருவாசலுக்கு சாணமிட்டு பெருக்கி கோலமிட.... கைலியால் மூடிக்கொண்டு சுருண்டு படுத்திருந்த சத்யன் மெல்லிய இருட்டின் உதவியுடன் கைலியால் மூடிக்கொண்டு கண்களுக்கு மட்டும் வழிவிட்டு மான்சியை ரசித்தான்...

அவள் செல்லுமிடமெல்லாம் கூடவே வரும் கொலுசொலி.... கைகள் அசையும் போதெல்லாம் சத்தமிடும் வளையல்கள்.... இரவு இவன் வைத்துவிட்டு வந்த பூச்சரம் இன்னும் காயாமல் தளர்ந்து போய் மான்சியின் கூந்தலில்.... சத்யனின் மனம் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது .... என் பொண்டாட்டி .... மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான்....

உள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்டு சத்யன் எழுந்து போய் குழந்தையை தூக்கி ஈரமான துணியை உதறிவிட்டு தனது கைலியால் குழந்தையை சுற்றிக்கொண்டு வெளியே தூக்கி வந்து அணைத்தபடி திண்ணையில் படுத்துக் கொண்டான்.....

திரும்பி பார்த்த மான்சி எதுவும் சொல்லாமல் வீட்டு வேலையை கவனிக்க.... வெளியே யாரோ " சத்யா" என்று கூப்பிடும் குரல் கேட்டது....
மான்சி வெளியே எட்டிப்பார்க்க... சத்யன் எழுந்து " வாங்க சித்தப்பா " என்றான்

சத்யனின் சித்தப்பா தான் வந்திருந்தார்.... ஆனால் அவருக்குப் பின்னால் சத்யனின் காளைகள் இரண்டும் நின்றிருந்தன..... " ஏப்பா சத்யா ,, உன் அம்மாவால இதுகளை பாத்துக்க முடியாதுனு அனுப்பி வச்சிருச்சு...." என்று கூற....

சத்யன் புன்னகையுடன் காளைகளை தடவிக் கொடுத்தபடி " என்ன கண்ணுகளா என்கிட்டயே வந்துட்டீங்களா?" என்றான் ....

சத்யனின் சித்தப்பா முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொள்ள... " என்ன சித்தப்பா ரொம்ப கோவமா இருக்கீங்க போலருக்கு?" என சத்யன் கேட்க...

" உன்மேல கோவப்பட நான் யாருப்பா? நம்ம சாதிசனத்துல எவனுமே செய்யாத காரியத்தை செய்திருக்க... இனி எந்த பங்காளியும் எங்களை மதிக்கப் போறதில்லை" வருத்தமாக அவர் கூற....

" சித்தப்பா,, பங்காளிகளுக்காக எல்லாம் நாம வாழ முடியாது.... யார் யாருக்கு யார்னு மேல ஒருத்தன் நிர்னயம் பண்ணி வச்சுருப்பான் அதன்படி தான் எல்லாம் நடக்கும் .... நான் நெனைச்சாலும் சரி நீங்க நெனைச்சாலும் சரி மாத்த முடியாது.... என் வாழ்க்கை அவளோடதான்னு ஆண்டவன் எப்பவோ முடிச்சுப் போட்டு வச்சிட்டான் சித்தப்பா" சத்யன் பொருமையாக எடுத்துக் கூற...

" அதென்னவோப்பா எனக்குத் தெரியாது... ஆனா இனிமே எந்த நல்லது கெட்டதுக்கும் அந்த பொண்ணை கூட்டிக்கிட்டு வரக்கூடாதுனு உன் அம்மா கன்டிசனா சொல்லிருச்சுபா" என்றவர் அங்கே நிற்காமல் நகர்ந்து விட்டார்....

" இதையும் போய் என் அம்மா கிட்ட சொல்லிடுங்க சித்தப்பா.... மான்சி வரக்கூடாதுனு சொல்ற இடத்துல இந்த சத்யனும் வரமாட்டான்.... அது என் சொந்த வீட்டு விசேசமா இருந்தாலும் சரிதான்" என்று சத்யன் அவர் காதுகளில் விழுவதுபோல் உரக்க கத்தி கூறினான்....


No comments:

Post a Comment